வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திரையில் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டப் போகிறார்களாம். படம்: இரண்டு முகம்

முதல் முறையாக திரையில் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டப் போகிறார்களாம். படம்: இரண்டு முகம்.

ஊமை விழிகள், உழவன் மகன் படங்களை இயக்கிய ஆர் அரவிந்தராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் கரண் நாயகர்களாக நடிக்கின்றனர்.
சமீபத்தில் சென்னை ஆந்திரா கிளப்பில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு ரசிகர்களைக் கூட்டி வைத்திருந்தார்கள். பரத்வாஜின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் வெளியிட, விசி குகநாதன், பார்த்திபன், அனு ஹாஸன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பேசிய கரண், "இந்தப் படத்தில்தான் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டியிருக்கிறார்கள். இதுவரை வேறு எந்தப் படத்திலும் இப்படி ஒரு கதையைப் பார்த்திருக்க முடியாது" என்றார்.
விழாவில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபலமாக இருந்த இரண்டு தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் படங்களை வைத்து பேனர்களை வைத்திருந்தார்கள். அவற்றில் ஒன்றில் விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும் இருப்பது போன்ற பேனர் இருந்தது.
இரண்டு முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடந்தது. பாடல்கள் அடங்கிய குறுந்தகடை நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் வெளியிட, நடிகர் டைரக்டர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய பார்த்திபன்,

தப்பி தவறி ஒரு தயாரிப்பாளர் வந்தால், அவரை பூ போட்டு வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் பட உலகம் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் வைத்தியலிங்க உடையார் படம் தயாரிக்க வரும்போது, அவரை வரவேண்டாம் என்று ஏ.எல்.அழகப்பன் தடுத்திருக்கிறார். அவர் தடுத்தும், தனது 40 வருட கனவை நிஜமாக்க வேண்டும் என்று இவர் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார்.
கஷ்டமோ, நஷ்டமோ சினிமாவில் இவை இரண்டையும் மீறிய சந்தோஷம் ஒன்று இருக்கிறது. அதனால் யாரும் யாரையும் தடுக்காதீர்கள்.

சத்யராஜபுக்கு இரண்டு முகம். ஒன்று, நடிப்பு முகம். இன்னொன்று நிஜ முகம். உலகம் முழுவதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அந்த லொள்ளு, அவருடைய வசன உச்சரிப்பு இதெல்லாம் இன்னொரு நடிகனுக்கு வருமா என்று தெரியவில்லை. இவர் ஒரு ஆண்டனி கிங். அவருடைய நிஜ முகத்தில் ஒரு சின்ன மழுப்பல் கூட இருக்காது.

தைரியம்தான் புருஷலட்சணம் என்று சொல்வார்கள். இந்த மனிதரின் லட்சணமும் அந்த தைரியம்தான். உலக தமிழர்கள் இடையே  புரட்சி தமிழன்' என்கிற பெயருக்கு ஒரு அர்த்தத்துடன் இருப்பவர் அவர். நடிப்பு இல்லாத அந்த நிஜ முகத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

ஒரு சில படங்களுக்கு மட்டும் திருட்டு சி.டி. வெளிவருவதில்லை என்ற தகவலை அறிந்த முதல் அமைச்சர், அதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அந்த மாதிரியான தகவலை முதல் அமைச்சருக்கு கொண்டு சென்றவர்களுக்கும், அதற்காக நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


இதுபற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், தன்னையும் ராமதாஸையும் எப்படி ஒப்பிடலாம் என கடுப்பாகிவிட்டது தனிக்கதை!
பதிவு செய்தவர்: இ வி ராமசாமி நாயக்கன்
பதிவு செய்தது: 04 Aug 2010 8:10 pm
அது வேற யாருமில்லை. நம்ம மரவெட்டி ராமதாஸ் தான் !!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சத்யராஜ் ரசிகன்
பதிவு செய்தது: 04 Aug 2010 4:24 pm
என்னது விஜயகாந்தும் ராமதாஸைம் நண்பர்களா! அப்படின்னா எவர்கள பத்திய கதைதானா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

கருத்துகள் இல்லை: