வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

வடக்கு- கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கே.பி. நியமனம்!


கொழும்பு: கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பான நோ்டோவின் (NERDO) செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை  புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள அவர், சாதாரண கைதிகளை போல நடத்தப்படவில்லை. மாறாக அவர், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் நேர்டோ என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி கோரி, புலம் பெயர் தமிழர்களுக்கு அவர் அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள்  தெரிவித்தன. இந்த நிலையில், இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில், நேர்டோவின் செயலராக கேபி நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி  வெளியாகியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் புனரமைப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு சர்வதேச நிதியுதவி கிடைக்க இலங்கை அரசும் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments: very old news 

கருத்துகள் இல்லை: