வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதா, தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என,

சென்னை : "உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

சதீஷ் - chennai,இந்தியா
2010-08-05 21:11:31 IST
இவர் இரும்பு மனிதர். வருங்கால இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டி...... நேர்மை நியாயம் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை அறிய அனைத்து அரசு அதிகாரிகளும் இவரிடம் பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்....
குமார் - Chennai,இந்தியா
2010-08-05 21:05:28 IST
உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும் மஞ்சத்துண்டு பற்றியும் மக்களுக்கு தெரியும். இது எல்லாம் நம் தலை எழுத்து......
maru - thanjavur,இந்தியா
2010-08-05 19:10:02 IST
world is round, selva ganapathy become rajya sabha MP of DMK, uma shankar suspended by dmk, Supported by Jaya. now ppl tell who is supporting corruption KK or Amma,....
kumar - hyderabad,இந்தியா
2010-08-05 18:03:42 IST
திரு உமா சங்கர் அவர்களே தங்கள் நேர்மை பற்றி அனைவற்றுக்கும் தெரியும். நேர்ருக்கடி வரும் போது முதலில் பலிகடா ஆவது நேர்மைதான். ஆனால் இறுதி வெற்றி நேர்மைக்கே. கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார். கவலை வேண்டாம். உங்கள் பணி மீண்டும் விரைவில் துவங்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெய் ஹிந்த். குமார்...
prabakar - singapore,ஸ்லேவாக்கியா
2010-08-05 17:45:44 IST
அம்மாவை முன்பு வருமான வரிதுரைனால் மாட்டிவிட்டதும் இவர்தான் அம்மாவுக்கு நினைப்பு இல்லை...
கர GOPALKRISHNAN - Tambaram,இந்தியா
2010-08-05 17:40:29 IST
ஆயிரத்து தொள்ளயிறது தொன்னுராம் வருடம் நான் ஹோசூரில் இருந்தேன் .. அப்போது உமாசங்கர் அவர்கள் அங்கு போஸ்டிங்கில் இருந்தார் .. ரேஷியன் கடைகளில் திடீர் சோதனை நடத்தி கையும் களவுமாக தவறுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் .. இது ஒரு நல்ல வாய்ப்பு உமாசங்கர் .. உடனடியாக மத்திய அரசுக்கு சென்று மக்களுக்கு நேரடியாக பயன் அள்ளிக்ககூடிய ஒரு துறை தேர்ந்து எடுத்து அதில் உமது நேர்மையான பணியை தொடருங்கள் .....
Tamizhan - UAE,இந்தியா
2010-08-05 17:40:22 IST
அம்மா நீங்க கொஞ்சம் நிறுத்துங்க உங்களுக்கு பதிலடி நாளைக்கு கிடைக்கும் எங்க தலைவர்கிட்ட இருந்து. 4வருசமா எங்கம்மா போயிருந்தீங்க? நீங்க என்ன சொன்னாலும் தமிழ்மக்கள் நம்புவதற்கு இது பழங்கால பர்கூர் தொகுதி இல்லை....
A.Thirumalai - bahrain,இந்தியா
2010-08-05 16:38:09 IST
Mr. Public that is the v.good decition taken by j.j. compare with any other politicion. she is the only cheif minister teach the lesson to the govt. workers....
பப்ளிக் - Bangalore,இந்தியா
2010-08-05 15:56:18 IST
ஆமா.. உன்னோட ஆட்சியில மூணு லட்சம் பெற டிஸ்மிஸ் பண்ணினியே.. உன்ன என்ன சொல்றது?...
தி .எஸ் .பிரகாசம் - Camp......Singapore,இந்தியா
2010-08-05 14:49:37 IST
IAS/IPS அதிகாரிகளை அடிக்கடி இடம் மாற்றி பந்தாடுவதில் மு.கவும் , ஜேயும் ஒன்றுதான். இதில் மாயாவதி இன்னும் மோசம் . எனவே IAS/IPS அதிகாரிகளின் பனி நியமனம் மற்றும் மாறுதல் இனங்களுக்கு அந்தஅந்த மாநில கவர்னரிடம் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது....
revathi - madurai,இந்தியா
2010-08-05 14:38:27 IST
ஜாதியை ஒழிக்க பாடுபடும் அரசு சான்றிதழுக்கு முக்கியத்துவம் தருவதா?...
பைஜி bangkok - bangkok,இந்தியா
2010-08-05 14:05:28 IST
உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும் மஞ்சத்துண்டு பற்றியும் மக்களுக்கு தெரியும். இது எல்லாம் நம் தலை எழுத்து...
சக்தி - seoul,தென் கொரியா
2010-08-05 14:02:29 IST
வழக்கம் போல் கருணாநிதி அவர்கள் .. நீண்டடடடட பதில் எழுதுவார். ஆனால் இது சம்மந்தமாக ஒன்றும் சொல்லமாட்டார்.....
வாசன் - Khobar,செனகல்
2010-08-05 13:51:33 IST
ஒரு நேர்மையான அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, பணி நீக்கம் செய்தது, தி. மு. க அரசின் பழிவாங்கும் செயல் மற்றும் உள்நோக்கம் உடையது. போலி சான்றிதல் எல்லாம் கட்டு கதை என்பது உலகறிந்த உண்மை. இதன் முலம் தி.மு.க தன் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துள்ளது....
தஞ்சை.ஞான.ஜெயராஜ் - DubaiUAE.,இந்தியா
2010-08-05 12:22:39 IST
அந்தம்மா ஆட்சிகாலத்தில் அவருடைய அமைச்சர்மீதே இதே உமாசங்கர்தான் ஊழல் குற்றச்சாட்டு கண்டுபிடித்தார் !ஆனால் அந்தம்மா அவரை பழி வாங்கவில்லையே ? இதிலிருந்து தெரியவில்லையா யார் தலித்துகளுக்கு விரோதிஎன்று? மக்கள் அணைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்,இந்தமவுனம் தேர்தல் சமயத்தில் வெடிக்கும் ஆளும்கட்சிக்கு ஆப்பாக!!! தஞ்சை.ஞான.ஜெயராஜ்....
s.swaminathan - coimbatore,இந்தியா
2010-08-05 11:27:39 IST
Dear Madam, You know very well about Mr.Karunanidi. Regarding Mr. Umashankar I.A.S issue, it is common as for as Mr. Karunanidhi is in rulling. To put an end to all his atrocity, you are the only leader to pull him down from politcal as well as from ruling....
வி.கணபதி - Dubai,இந்தியா
2010-08-05 11:13:00 IST
தப்புதான் தாயே அவங்களா நீங்க மனிசுடுங்க ...சரி நீங்க இதுமாதரி யாரையும் இப்படி பன்னலைய...? நீங்க ஒழுங்க இருங்க மத்தவங்கள அப்புறம் குற்றம் சொல்லலாம் .....
THE BEST PERSON - ALLOVERWORLD,இந்தியா
2010-08-05 10:52:07 IST
Respected I.A.S. sirs, please come forward you need lead the people. How many years un-educated people rules in our motherland (i haven't mention the perfect persons)?. please please you do some best. I expect coming soon in our country politician all HONOURABLE I.A.S. equvalent studied persons. MY VOTE FOR YOU. jai hindh....
விட்டப் - chennai,இந்தியா
2010-08-05 10:44:33 IST
starting up three industries!!!!!! howmany crores they are getting ???? will it really going to help people?...
Michael - Singapore,ஸ்லேவாக்கியா
2010-08-05 10:39:40 IST
ரொம்ப பேசாதீங்க மேடம், உங்க ஆட்சி சுடுகாட்டு ஊழலை வெளிய கொண்டு வந்ததே இவர்தான்னு நெனைக்கிறேன்!!! உங்களுக்கே ஆபத்தா போய்டப் போறது......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-05 10:31:19 IST
அரசு கேபிள் டிவி எந்த நோக்கத்திற்க்காக தொடங்கப்பட்டது?. அதன் தற்போதைய செயல்பாடுகள் என்ன என்பதனை நம் முதல்வர் விளக்குவாரா?. நண்பர் சீனிவாசன் சொன்னது போல் உமாசங்கர் விஷயத்தில் அரசு ஊழியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த பகுதியில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக குரல் எழுப்பும் அரசு ஊழியர் வாசகர்கள் தங்கள் கருத்துகளை இதற்கும் பதிவு செய்யவேண்டும்....
vaithianathan - Muscat,பாகிஸ்தான்
2010-08-05 10:25:15 IST
தவறு யார் செய்தாலும் அதை விமர்சனம் செய்து கருத்து சொல்லவேண்டும். அதை விட்டு விட்டு சிலர் அறிவு கேட்டவர்கள் அம்மையார் அதை செய்தார்கள், இதை செய்தார்கள் என்று கருத்து சொல்வது முட்டாள்தனம். அம்மையாரை ஒப்பிட்டு பேசுவது அதைவிட முட்டாள்தனம். அம்மையார் தவறு செய்தார்கள் என்று இந்த கொல்லைக்கரர்களை ஆட்சியில் அமர்த்தினீர்கள்.இவர்களும் அதே தவறை எப்படி செய்ய முடியும்....
ezhil - thanjai,இந்தியா
2010-08-05 10:18:22 IST
இதற்க்கு உமாசங்கர் மட்டுமல்ல இந்திய மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணியாளர்களையும் பனி நீக்கம் செய்யப்படவேண்டும். ௨௦ வருடம் கண்டுபிடிக்காமல் என்ன செய்தார்கள்? ஏன் அவர் திருவாரூர் கலெக்டராக வைக்கும்போது கலைஞருக்கு தெரியாதா? இதற்கு கலைஞரும் பதில் அளிக்கவேண்டும். அரசு அலுவலர்களை பழிவாங்கும் போக்கு இந்தியாவின் நேர்மையான போக்கை மாற்றும் தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் உருவாகும் நிலை கலைஞரால் ஏற்படும்....
siva - tirupur,இந்தியா
2010-08-05 10:16:41 IST
ஐ.எ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே கொஞ்சம் உங்கள் தன்மான உணர்வை தட்டி எழுப்புங்கள். நீங்கள் ஒன்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் வேலைக்கு வரவில்லை. இன்றைய நிலையிலும் நம் நாட்டில் மிக உயரிய தேர்வில் வெற்றி பெற்று வந்துல்லிர்கள். உங்களைப்பற்றி உங்களுக்கே ஒரு உயரிய எண்ணம் வேண்டும். எதற்காக நம் நாட்டில் கேவலமானவர்களாக கருதப்படும் அரசியல் வியாதிகளுக்கு பயப்படவேண்டும்? இவ்வளவு படித்த நீங்களே பயபட்டால் படிக்காத சாமானியர்களின் நிலை? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் தி.என்.சேசன் அவர்களை என்ன செய்ய முடிந்தது? திரு . உமாசங்கர் அவர்களே நீங்கள் பளிவாங்கபடுகிரிர்களா அல்லது நிஜமாலுமே தவறு செய்தீர்களா என்று தெரியாது. நீங்கள் நேர்மையானவர் என்று கேள்விபட்டிரிருக்கிறேன். உங்கள் நேர்மைக்கு நீதி கிடைக்கட்டும். சிவா. திருப்பூர்...
குமார் - coimbatore,இந்தியா
2010-08-05 10:07:14 IST
மக்கள் மேல அக்கறை இருக்கோ இல்லையோ. அவர எதிர்த்து கேள்வி கேட்க நீங்க ஒருத்தராவது இவளவு நாலா தாக்குபுடிச்சு இருக்கீங்களே..சந்தோசம். இளங்கோவன் வேற எக்கசக்கமா பேசிட்டாரு. நாளைக்கு இருக்கு தமிழ் கச்சேரி....
Jeeva - Chennai,இந்தியா
2010-08-05 10:02:34 IST
How come this lady assumes that people are having short memory? The same Mr.Umasankar I.A.S officer found the corruption of Mr.Selvaganapathi the then minister during ADMK's rule. No doubt Mr.Uma Sankar is one of the honest IAS officers. But, this lady kicked him during er tenure and now sheddding crocodile tears for him. The biggest joke is that Selva ganapathy is in DMK now. What is really happening? These dirty politicians expect all the well educated and qualified officers to keep quite which is always not possible! DMK is dirty and ADMK is the dirtiest. These people do not have any right to talk about Mr.Uma Sankar....
பிரேம்குமார் - Surat,இந்தியா
2010-08-05 09:19:55 IST
அம்மா அது நடந்து ஆச்சு ஒரு வாரம் ! திடீர்னு தலித்துகள் மேல் கரிசனமோ ?...
லியோ - paramakudi,இந்தியா
2010-08-05 07:57:32 IST
ர்ரொம்ப நடிக்காதே அம்மையாரே. நீ ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேரை பலி வாங்கின. நீ பண்ணாத எல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம் என்று நினைப்பா.ஆளை பாரு.நீ நன்றாக தான் கபட நாடகம் ஆடுற....
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-05 07:57:30 IST
இப்படி கொள்ளை அடிக்கத்தான் நாங்கள் வரி செலுத்தவேண்டுமா? மஞ்சத்துண்டாரே, ஜெயாவைக் குற்றம் காண்பதைவிட்டு ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொல்லுங்கள்.? ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது? தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இப்படி கொள்ளை அடிக்கத்தான் நாங்கள் வரி செலுத்தவேண்டுமா? எவனோ திருடிஎடுத்துபோவான் எனத் தெரிந்தால் எவன் உருப்படியாக வரி கட்டுவான் ?...
saran - singapore,இந்தியா
2010-08-05 07:52:22 IST
உங்க ஆட்சில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த ஒரு அதிகாரிக்கு நீங்க ஆதரவு அறிக்கை விடுகிறீர்களா? என்ன ஆச்சர்யம்? சைடு மாறிட்டதா சிக்னல் வந்துடுச்சா? இல்ல நெஜமாவே திருந்திட்டீங்களா மேடம்?...
ரா.ப.குமார் - dindigul,இந்தியா
2010-08-05 07:46:02 IST
அறுபதாயிரம் கோடி ஊழல் பேர்வழியை பற்றி பேசினால் ஐயோ, தலித் என்பதால் குறை சொல்கிறார்களே என்று நீலிகண்ணீர் வடிப்பது, நேர்மையான தலித் அதிகாரி தன குடும்பம் சம்பாதிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தால் நடவடிக்கை, வழக்கு...யோவ் உனக்கு ...........
seenivasan - chennai,இந்தியா
2010-08-05 07:44:00 IST
இதற்க்கு அரசு ஊழியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்...
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-05 07:42:36 IST
மஞ்சத்துண்டு காலத்தில்தான் ஐ ஏ எஸ் அதிகாரிகளைக் கொடுமைப்படுத்துவது தொடங்கியது. முதன் முதலில் பதவிக்குவந்த உடனே தலைமைச் செயலாளர் ராயப்பாவை அவர் படுத்தியபாடும், அவர் நீதிமன்றத்துக்குச் சென்றதும் முதல் அசிங்கம்.பிறகு படிக்காத அதிகரிகளைப் பழிவாங்குவது, 'வசூல்' பண்ணித் தருபவர்களுக்கு முன்னுரிமை என ஆரம்பித்து, இப்போது ஒரு நல்ல அதிகாரியான உமாசங்கரை 'ஊழல் சொந்த'ங்களின் நெருக்குதலுக்காக பந்தாடி வெளியேற்ற முயற்சிப்பதும் நாடறிந்த வரலாறு.ஜெயாவும் தவறு செய்தார்.ஆனால் தன் மந்திரிமீதே உமாசங்கர் புகார் சொன்னபோது கூட அவரை ஒன்றும் செய்யவில்லை.ஜால்ரா அதிகாரிகளும், கடைந்தெடுத்த அயோக்கிய திராவிடக் கட்சிகளும் உள்ளவரை இந்த அவலம் தொடரும்!...
ஆனந்த குமார் - திருச்சி,இந்தியா
2010-08-05 07:04:21 IST
அரசு கேபிள் டிவி நிறுவனம் என்பது ,அரசு பணத்தில்,குடும்பம் ஒற்றுமை கண்டது .இது மிக பெரிய சாதனை அல்லவா .இதை ஒரு பெரிய விசயமாக விளம்பரம் செய்கிறார இந்த அம்மையார் . இதை மலை போட்டு எனக்கு பாராட்டு விழா எடுத்த என் உடன்பிறப்புகள் ஆகிய கேபிள் டிவி ஒபெரடோர்கள் ஒன்றும் சொல்லாத பொது இந்த அம்மையாருக்கு என் இந்த பொறமை .எதை பற்றி நான் அன்னை சோனியா ,பிரதமற்கும் கடிதம் ஏழுதி ,இலங்கை தமிழர் பிரச்சனை திறத்தார் போல் திர்கபடும்...
சாமி - bangkok,டோகோ
2010-08-05 06:56:49 IST
சரியா சொன்னிங்கம்மா. நீங்க சொன்னதில எந்த குறைபாடும் இல்ல. ஆனா அந்த நானூறு கோடி வேணா முன்ன பின்ன இருக்கலாம். நாளைக்கு தலைவரே சொல்வாரு. சொந்த குடும்ப சண்டையை கூட பயன் படுத்தி மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு தானை தலைவர் மஞ்ச துண்டு உதாரணம். உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும். அதே நேரத்தில் தானை தலைவரை பற்றியும் தமிழ் நாடு மக்களுக்கு தெரியும். இதை பற்றி பேசியதற்கு நன்றி....
லிங்கம் - Chennai,இந்தியா
2010-08-05 06:27:09 IST
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு ஜெயலலிதா அரசாங்கம் விளம்பரம் கொடுத்ததன் மூலம் பல லட்சங்களை விரயம் செய்ததாகச் சென்ற ஆட்சியைப் பற்றி கருணாநிதி கூறினாரே இன்று அரசு கேபிள் மூலம் மக்கள் வரிப்பணம் 400 கோடி விரையமாக்கப்பட்டிருக்கிறதே... ஏதாவது ’உருப்படியான’ பதில் இருக்கிறதா? கருணாநிதியைக், கருணாநிதி என்று கூறுகிறார்கள்.. புத்தர், ஏசு என்றெல்லாம் கூறமாட்டேன் என்கிறார்கள்...என் மகன்களை ‘அஞ்சா நெஞ்சன்’ என்றோ, ‘தளபதி’ என்றோ கூற மாட்டேன் என்கிறார்கள்... போன்ற ‘உளறல்கள்’தானா?...
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-08-05 00:59:12 IST
ஐயோ..எப்ப பாத்தாலும் இதே மாதிரி தேவையில்லாத அறிக்கை தானா? சீக்கிரம் தேர்தல் வரபோகுது..இந்த ஊசிப்போன அறிக்கையால எதுவுமே ஆகாது.. மக்களெல்லாம் ரொம்ப விழிப்பா வேற இருக்காங்க..அந்த பக்கம் பாத்திங்களா? 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள்...மக்களோட உண்மையான ஆதரவு வேணுமுன்னா,மக்களுக்காக உண்மையா போராடுங்க.....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-05 00:52:27 IST
ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமைதான் தமிழ் நாட்டு மக்களின் தற்போதைய நிலைமை.கருணாநிதியின் குடும்ப சண்டை காரணமாக உருவான அரசு கேபிள் டீ வி,அந்த குடும்பங்கள் ஒன்றான பிறகு மூடப்பட்டுவிட்டது.இதற்கு செலவு நானூறு கோடி ரூபாய்.இது யாருடைய பணம்? இளிச்சவாயன் தமிழனுடையது.ஒரு குடும்பத்தை வாழ வைக்க ஏழு கோடி பேர் செத்து கொண்டு இருக்கிறார்கள். இது தான் தமிழகத்தின் நிலைமை. 2006 -இல் ஜெயலலிதா ஆட்சியே தொடர்ந்து இருந்தால் இந்த ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமை வந்திருக்காது....

கருத்துகள் இல்லை: