சனி, 7 ஆகஸ்ட், 2010

பிரசன்னா 10 கிலோ குறைத்தார்

திறமையிருந்தும் கோடம்பாக்கத்தில் இன்னும் ஒரு சரியான ஹிட்டுக்காகக் காத்திருக்கும் நடிகர் பிரசன்னா.

அதே நேரம் கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர். அவரது சமீபத்திய படமான நாணயம் பத்திரிகைகளின் பாராட்டுக்களைப் பெற்றும், பெரிய ஹிட்டாக அமையவில்லை.

இந்த நிலையில் முரண் எனும் படத்தில் சேரனுடன் இன்னொரு நாயகனாக நடிக்கிறார் பிரசன்னா. இந்தப் படத்தை இயக்குவர் ராஜன் மாதவ். மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் மறைந்த ரவீந்திரனின் மகன் இவர்.

இந்தப் படத்துக்காக பிரசன்னா 10 கிலோ வரை எடையைக் குறைக்க வேண்டியிருக்கும் என இயக்குநர் ஒரு நாள் கூறினாராம். அடுத்த சில தினங்கள் யார் கண்ணிலும் படாமலிருந்த பிரசன்னா, இயக்குநர் சொன்னபடி 10 கிலோ குறைந்த பிறகுதான் தலை காட்டினாராம். இப்படியும் ஒரு சின்ஸியாரிட்டியா என இயக்குநருக்கு ஆச்சர்யம்.

இந்த நிலையில், முரளி மகன் அதர்வாவுடன் பிரசன்னா நடித்துள்ள பாணா காத்தாடி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனையைத் தரும் என்கிறார் பிரசன்னா. நம்பிக்கை பலிக்கட்டும்!
பதிவு செய்தவர்: மலையப்பன்
பதிவு செய்தது: 06 Aug 2010 8:37 pm
Really Prasanna is a good actor.He is better than all the young heroes.Soon he will get a good break in tamil filmdom .All the best prasanna.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: daey
பதிவு செய்தது: 06 Aug 2010 6:40 pm
" உண்மை " கொஞ்சம் திருந்துங்க ட

கருத்துகள் இல்லை: