புதன், 4 ஆகஸ்ட், 2010

அருந்ததி யார்?தற்போது வெளுத்துக்கட்டு படம் மூலம்


சில மாதங்களுக்கு முன்பு உருவாகி வெளியன படம் வேடப்பன். இதில் நாயகியாக நடித்திருந்தவர் அப்சரா. வேடப்பன் அப்சராவுக்கு எந்த விடிவையும் தரவில்லை. இதனால் சோர்ந்திருந்த அப்சரா, எஸ்.ஏ.சந்திரசேகரன் கண்ணில் பட்டு அருந்ததி என்ற புது நாமகரணத்துடன் வெளுத்துக்கட்டு படத்தில் நாயகியாக நடித்தார்.

இப்போது வெளுத்துக்கட்டு அருந்ததி என்ற பெயருடன் கோலிவுட்டில் பிசியாக ஆரம்பித்திருக்கிறார்.

வெளுத்துக்கட்டு படம் மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது ஹரிகுமாருடன் போடிநாயக்கனூர் கணேசன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருந்ததி. இதுதவிர சில புதிய படங்களுக்கும் பேசி வருகிறாராம்.

இவரிடம், வேடப்பன் படத்தில் நடித்தவர் நீங்கதானே என்று யாராவது கேட்டால் இல்லை என்று மறுத்து விடுகிறாராம் அருந்ததி.

ஏன் வேடப்பன் படத்தில் நடித்ததை மறைக்க, மறுக்க விரும்புகிறார் அருந்ததி என்று தெரியவில்லை.

மறக்க நினைக்கிறார் என்றால் வேப்பங்காய் ரேஞ்சுக்கு வேடப்பன் அவருக்கு பெரும் கசப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.

கருத்துகள் இல்லை: