ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

புலிகளின் 3,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாக இருந்து சரணடைந்தவர்களில்  சுமார் 3,000 பேர் இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளிகள்  11,689  பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதற்கு இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 3,000 பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் சிறுவர்கள் அங்கவீனமானோர் கர்பிணிகள் பிள்ளைகள் கொண்ட தாய்மார்கள் சிறு குற்றங்கள் புரிந்தோர் நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டோர் ஆகியோரும் உட்படுவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.363 சிறுவர்கள் மற்றும் 231 சிறுமிகளும் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்களில்  பெரும்பாலானோர் பலவந்தமாக புலிகள்  அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: