வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே எந்திரன் படப் பாடல்கள் இன்டர்நெட்டில் படு தாராளமாக புழங்க ஆரம்பித்து விட்டது.ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் வைக்காமல் கோலாலம்பூரில் போய் வைத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த விழா நடந்த சில நிமிடங்களிலேயே அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படு துல்லியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையதளங்களில் வெளியாகி விட்டது. ஏகப்பட்ட இணையதளங்களில் எந்திரன் படப் பாடல்கள் கிடைக்கின்றன. சில தளங்களில் டவுன்லோட் செய்ய பணத்தையும் கறக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தனியாக இசை வெளியீடு நடத்தத் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இப்படத்தின் பாடல்களை இணையதளங்களில் இலவசமாக கேட்க முடிகிறது.மொத்தம் 7 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. வைரமுத்து, பா.
விஜய் ![[^]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_upNJjF5A17SJiYPC0IXR-fXVkdAX1hbDxaqkN77j_Gf8zoVV8h9YAfUhChQzdoUNFfzrymbEhv28EVBJwdeA9Px49yrQ=s0-d)
, கார்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பூம்பூம் ரோபோ டா என்று தொடங்கும் பாடலை யோகி பி, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன, தன்வீர் ஷா பாடியுள்ளனர். அரிமா அரிமா பாடலை ஹரிஹரன், சாதனா சர்கம் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
காதல் அனுக்கள் பாடலை விஜய் பிரகாஷ், ஷ்ரேயாகோஷல் பாடியுள்ளனர். கிளிமஞ்சாரோ பாடலை ஜாவேத் அலி, சின்மயி பாடியுள்ளனர்.
இரும்பிலே ஒரு இதயம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், கஷன் கிரிஸியும் பாடியுள்ளனர். சிட்டின் டான்ஸ் ஷோகேஸை எஸ்.பி.பி, ரஹ்மான், அவரது மகள் கதீஜா ஆகியோர் பாடியுள்ளனர்.
புதிய மனிதா பாடலை பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி பாடியுள்ளனர்.மலேசியாவில் இசை வெளியீடு முடிந்த உடனேயே தமிழகத்திலும் ஆடியோ, சிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டன.
ரஜினி
ரசிகர்கள் ![[^]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_upNJjF5A17SJiYPC0IXR-fXVkdAX1hbDxaqkN77j_Gf8zoVV8h9YAfUhChQzdoUNFfzrymbEhv28EVBJwdeA9Px49yrQ=s0-d)
ஆவலுடன் இதை வாங்கிச் செல்கின்றனர்.இதேபோல எந்திரன் பட வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பையும் பதிவு செய்து துல்லியமான முறையில் யூடியூபில் வெளியிட்டு விட்டனர். அதையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக