ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

English training for teachers in North and East ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி

டக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஆசிரியர்களுக்கு பிரிட்டிஸ் கவுன்சில் ஆங்கில மொழிப் பயிற்சியினை வழங்குகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தாம் முன்னெடுத்திருப்பதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஆணையகம் கூறுகிறது.

இரண்டு மாகாணங்களிலும் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சியாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வகுப்பறை ஆங்கிலமொழித் திட்டம் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கிலமொழிப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்ட இந்தத் திட்டத்திற்காக பிரித்தானிய உயர் ஆணையகம் 2.3 மில்லியன் ரூபா பணத்தினை ஒதுக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: