யாழ். போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவன் ஒருவர் சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ். மருத்துவபீட மாணவனான சாரங்கன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் யாழ். வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் பயிற்சி பெற்று வருகின்றார்.
கந்தரோடை சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டில் மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான புலன் விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக