கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். தொழில் அதிபர். இவரது மின்னஞ்சலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த மைசாப்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஒரு தகவல் வந்தது.
அதில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் பணம் 2 மாதத்தில் இரட்டிப்பு செய்துத் தரப்படும் என இருந்தது. இதை நம்பி உன்னி கிருஷ்ணன் ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் இரண்டு மாதம் ஆகியும் இரட்டிப்பு தொகை கிடைக்கவில்லை. எனவே, தோப்புபடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கோழிக்கோடு தாமரைச்சேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற வாலிபரை கைது செய்தனர். இந்த மோசடியின் பின்னனியில் மும்பையைச் சேர்ந்த ஒரு மாபியா கும்பல் இருப்பது தெரிய வந்தது. மாபியா கும்பல் தலைவரான இந்தூரைச் சேர்ந்த ஹேமந்த் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இக்கும்பல் கேரளாவில் மட்டும் பல முக்கிய தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பதிவு செய்தது: 23 Aug 2010 5:53 pm
வாவ், ஹேமந்த் குமார்! நூதன முறை மோசடி எல்லாம் எப்படித்தான் செய்கிறீர்களோ. அடுத்தவன் பணத்துக்கு எண்டா இப்படி ஆசைப்படறீங்க? ரிகஷா காரன் முதல் ராக்கெட் விடறவன் வரை அவனவன் ரேஞ்சுக்கு தகுந்தாற்போல் கொள்ளையடிக்கிறான். பிடிக்க போனால் மாபியா கும்பலின் தொடர்பு. மாபியா கும்பலை பிடிக்கப்போனால் மாபியா பெரிய அரசியல்வாதிகளுடன் தொடர்பு. எவனையும் பிடித்து தண்டனை கொடுக்க முடியாத அளவுக்கு சரி பண்ணி விடுகிறார்கள் பாரத தேசம் உருப்படுமா? தவறுக்கு தண்டனை கொடுக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக