ஏ-9 வீதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் : அதிகளவு உள்ளூர் உல்லாச பயணிகள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்புகின்றனர்!
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ-9 வீதியில் 24 மணிநேரமும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகளவு உள்ளூர் உல்லாச பயணிகள் யாழ்ப் பாணத்திற்குச் சென்று திரும்புகின்றனர்.அங்கு நடைபெற்றுவரும் கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்வதற்காக பெருமளவிலானோர் வருகை தருகின்றனர்.
இதனால் ஏ- 9 இல் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தென்பகுதியிலிருந்து பெருமளவு சிங்கள மக்கள் நயினாதீவுக்கும் யாழ். நாகவிகாரைக்கும் யாத்திரை செய்து வருகின்றனர். மிகவும் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்படும் இடங்களான ஓமந்தை, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை போன்ற பிரதான நகரங்களில் பொலிஸார் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை யாழ் நகரிலும் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இங்கு வீதி ஒழுங்கைக் கவனிப்பதற்கு ஏதுவாக விசேட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென் பகுதியிலிருந்து பெருமளவிலானோர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் செல்வதனால் அங்கு தங்குமிட வசதி பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி விடுதிகளை நடத்துவோர் அறைகளுக்கான கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் செல்வோரில் பலர் வாகனங்களுக்குள்ளும் வாகனங்களுக்குக் கீழும் படுத்துறங்கும் நிலை காணப்படுகிறது.வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோரின் வருகை அதி கரிப்பால் குடாநாட்டு உற்பத்தி பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக