புதன், 23 ஜூலை, 2025

ஜெகதீப் தன்கரை மிரட்டிய மோடி டீம்! அடுத்த துணை ஜனாதிபதி ராஜ்நாத்சிங்- திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி

 minnambalam.com - Mathi: நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள்தான் மிரட்டல் விடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி எம்பி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். PM Modi Jagdeep Dhankhar
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி கூறுகையில், நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இம்பீச்மென்ட் ( தகுதி நீக்கம்) தீர்மானத்தை மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டதை மத்திய அரசு விரும்பவில்லை.



இதனையடுத்து ஜெகதீப் தன்கரை பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடியும் அவரது கேபினட் அமைச்சர்களும் கட்டாயப்படுத்தினர். மேலும் இரவு 9 மணிக்குள் துணை ஜனாதிபதியை ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால்தான் ஜெகதீப் தன்கர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை துணை ஜனாதிபதியாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக கேள்விப்படுகிறேன். இவ்வாறு கல்யாண் பானர்ஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: