Vimalaadhithan Mani : நாளைக்கு நீங்க ரோட்ல போய்க்கிட்ருப்பீங்க.ஒரு நாலு பேர் வந்து ஜெய் ஸ்ரீராம் சொல்லும்பானுக .
நீங்க சிரிச்சுட்டே விளையாடாமப் போங்க பாஸ் னு சொல்லி நகரப் பார்ப்பீங்க. அப்ப ஒருத்தன் நீ இந்து தான ஜெய் ஸ்ரீராம் சொல்லமாட்டியான்னு கேட்டு உங்க பொடனிலயே ஓங்கி ஒன்னு போடுவான்.
உங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியாது. சுத்தி இருக்கவங்களும் இதை ஒரு பெருசாவே பாக்கமாட்டாங்க. ஒரு ஜெய் ஸ்ரீராம் சொல்றதால என்ன ஆகப்போகுது சொல்லிட்டுப் போகலாம்லன்னு உங்களுக்கு அட்வைஸ் கூட பண்ணுவாங்க.
டேய் நான் ஏன்டா சொல்லணும், இதை சொன்னாத்தான் நான் இந்துவான்னு உங்களுக்குத் தோணும். ஆனா அடுத்த அடி விழும் முதுகுல.
இப்ப சொல்லமுடியாதுன்னா அடுத்த கேள்வி நீ கிறிஸ்டியனா முஸ்லீமான்னு வரும். இல்ல இந்துதான்னு சொன்னா அப்ப சொல்லுடான்னு அடுத்த அடி விழும். அதை ஒரு நாலு பேரு அமைதியா கேள்வியே கேட்காம வீடியோ எடுப்பானுக. இந்நேரம் உங்களுக்கு ரத்தம் வந்துருக்கும். அவனுங்க உற்சாகமாகி இன்னும் அடி வெளுக்க ஆரம்பிப்பானுக.
இப்ப என்ன நடக்கும்?
1. உங்களுக்குக் கோபம் வரும். நீங்க அடிக்கப் பார்ப்பீங்க. ஆளுங்க அதிகமாயிட்டாதால உங்களால ஒன்னும் பண்ணமுடியாது. கடைசியில அடிவாங்கிட்டு , வேற வழியில்லாம அதை சொல்லிட்டு வருவீங்க.
2. சொல்லச் சொன்னதை சொல்லிடுவீங்க.
3. சுத்தி யார்னா ஹெல்ப்க்கு வர்றாங்களான்னு பாப்பீங்க. யாரும் வரப் போறதில்ல.
இப்ப உங்க சித்தாந்தம், கொள்கை எல்லாமே உங்க முன்னாடி வந்து கேலியா சிரிக்கும்.
யாரைப் பாத்தாலும் தனித்தனி மதமாக, சாதியா பிரிஞ்சு போயிக்கிட்டே இருப்பாங்க அவங்கவங்களைக் காப்பாத்திக்க.
அப்ப நீங்க திமுக, கம்யூனிஸ்ட், திக மாதிரி சாதி மத மாச்சரியங்களை ஆதரிக்காத ஒரு முற்போக்கு ஆளைத் தேடுவீங்க.
ஆனா இவங்க யாரும் சிக்கமாட்டாங்க. ஏன்னா உங்களுக்கு நல்லது செய்தும் உங்களால புறக்கணிக்கப்பட்ட அவன், அவன் சொந்த பொழப்பைக் பார்க்க போயிருப்பான்
நீங்க ஆகப்பெரிய இந்து பக்தனாக இருக்கலாம். ராமாயணம் மகாபாரதம்னு கரைச்சுக் குடிச்சுருக்கலாம்.
ஆனா மத வெறி சாதி வெறி பிடிச்ச கும்பல் கிட்ட நீங்க மாட்டுனீங்கன்னா உங்க அடிப்படை அறிவுக்குப் புறம்பா நீங்க நடக்குறதை உங்க மனசாட்சி கேள்வி கேட்டாலும் உங்களால எதிர்க்கமுடியாது, துணையும் இருக்காது.
இது இந்து மதத்துக்கு மட்டுமில்ல.
எந்த நாட்டுல எந்த மதத்துலயும் அடிப்படைவாதிகளிடம் நாடு சிக்கினால் இதுதான் நடக்கும். இது எல்லா ஊர்கள்லயும் நடக்குது. ஒவ்வொரு இடங்கள்ல ஒவ்வொரு மதத்தோட பேர்ல.
கிறிஸ்துவம் இஸ்லாம் ஏன் அகிம்சையை வலியுறுத்துற புத்தமதம் நிலவுற இலங்கைல கூட நடக்குது.
முற்போக்கானவர்களைத் தேர்ந்தேடுப்பதும் அவர்களைத் தக்க வைத்துக்கொள்வதும் நமது அடிப்படைக் கடமை.
நீங்க என்னென்ன காரணங்களுக்காக சாதி மதங்களை தூக்கிப்பிடிக்கும் பாசிசவாதிகளை, பிற்போக்குவாதிகளை ஆதரித்தாலும் உங்க அடிப்படை உரிமைகள் பறிபோவது நிச்சயம்.
சிக்கல் என்னன்னா கல்வியறிவில் மேம்பட்ட பகுத்தறிவாளர்கள் நிறைந்த, மத நல்லிணக்கம் நிரம்ப உடைய தமிழகத்தில் மத வெறுப்பையும், சாதி வெறியையும், பாசிசத்தையும், பிற்போக்கையும் திணிக்க துடிக்கும் பாஜகவுக்கு உதவ இன்று பல சாதிக்கட்சிகள், இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் தூக்கி பிடிக்கும் தலித்திய அரசியல் பேசும் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. இனிவரும் தேர்தல்களில் நீங்க திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க. இல்ல யாருக்குன்னாலும் ஓட்டுப் போடுங்க. ஆனா எது பாசிசத்தைத் தடுக்கும் எது உங்கள் உரிமையை மீட்டுத்தரும், யார் உங்களுக்காக போராடுவார்ங்கற உண்மையைப் புரிஞ்சு கிட்டு ஓட்டுப்போடுங்க.
ஓட்டு உங்கள் உரிமை, சரியான ஓட்டு பதிவு உங்கள் கடமை .
பிகு: இது உங்களைப் பயமுறுத்துவதற்காகவோ இல்லை மிகைப்படுத்தியோ கூறப்பட்டதல்ல. இயல்பாக நம் நாட்டிலோ பிற நாடுகளிலோ ஆங்காங்கே அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் திட்டமிட்ட சமூக வன்முறையே இவையெல்லாம். இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒன்றுபடுவோம். வாழ்த்துக்கள்.
பிகு 2 : இதுல List of Characters ..
* ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடிப்போர்= BJP
* ஜெய்ஸ்ரீராம் சொன்னா கொறைஞ்சிடுவியா என்போர்= அதிமுக
* நீங்கள் அநியாயமாக அடி வாங்குவதை வேடிக்கை பார்ப்போர்/Photo எடுப்போர்= சாதி கட்சிகள், தலித்திய கட்சிகள்
*Muslim-ன்னா வீட்டில் தமிழ் பேசுவியா?= சீமான்
இறுதியாக உங்களை மீட்க வருவோர் = திமுக மட்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக