minnambalam.com -christopher : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 17) கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம் கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை! - armstrong murder accused
தொடர்ந்து மற்ற 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மைத்துனரான வழக்கறிஞர் அருள் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் அவர் மலர்கொடியுடன் தொடர்ச்சியாக பேசியதும், இவரது வங்கிக் கணக்கில் இருந்து தான் கொலை கும்பலுக்கு 50 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தற்போது மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக