ஞாயிறு, 14 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

maalaimalar :  சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.

அவரது வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு பைக் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது. அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார்.பின்னர் இன்னொரு பைக்கில் மற்றொருவர் வருகிறார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வருகிறார். அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரமித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்கள் அவரை தாக்கியதை பார்த்து பின்னோக்கி சென்றனர். ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது சொமேட்டோ டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த ஆரமித்தார். உடனே அவர் பின்னோக்கி ஓடினார்.

வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்க இன்னும் 3 பேர் சுற்றி இருந்த தொழிலார்களை அடித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: