சனி, 7 டிசம்பர், 2024

நடிகர் விஜய் ஆதவ் அர்ஜுனா கூட்டணி - திமுக தமிழ்நாட்டில் வரலாற்று புரட்சிகளை சாதித்த கருத்தியல் இயக்கம்!

May be a doodle of 1 person and text

Kathiravan Mayavan :  திமுக ஒரு கருத்தியல் இயக்கம்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
நானும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.
விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா (ரெட்டியார்) அவர்கள் பேச்சையும் கேட்டேன்
காஞ்சி பெரியவர் சரஸ்வதி சாமி அவர்களை நல்ல சாமி என்றும் மற்றவர்கள் அனைவரும் போலி சாமியார்கள் என்றும் அவர் பேசியது மிகப்பெரிய ஹைலைட்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனின் உடைய எண்ணங்கள் அனைத்தும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சுற்றியே இருக்கும் என அவர் பேசியது மற்றொரு ஹைலைட்.


தமிழ்நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு மன்னர் குடும்பம் என்றும்  தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை அகற்ற வேண்டும் எனும் அவர் முழக்கமிட்டது ஹைலைட்டின் ஹைலைட்.
இவை குறித்து நிருபர்கள் திருமாவளவன் அவர்களிடம் நீங்கள் உங்கள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பீர்களா ? கட்சி விட்டு விலக்குவீர்களா?  என கேட்ட போது ஒரு சிறிய புன்னகையோடு எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவில் பேசி இது குறித்து நாங்கள் முடிவெடுப்போம் என அவர் பேசும்போது இதுபோல உயர் மட்டக் குழுவில் பேசுவோம் என அவர் பலமுறை சொல்லியது தான் நினைவுக்கு வந்தது அவரைப் போலவே எனக்கும் சிறிய புன்னகை தான் வந்தது.
திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் ஒரு கருத்தியல் இயக்கம். தமிழ்நாட்டில் வரலாற்றில் மகா பெரும் புரட்சிகளை ஏற்படுத்திய சமூக இயக்கம். இதன் வரலாறு என்பது ஒரு நூற்றாண்டுக்கு மேலாக களத்தில் நின்று , மக்களோடு மக்களாக மக்களாட்சிய நிறுவிய மாபெரும் இயக்கத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியாகும்.
திமுக என்றுமே ஒரு குடும்ப கட்சி தான் ,
ஆம்
தமிழ்நாட்டு மக்கள், தமிழர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று பலமுறை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் , தற்போதைய தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஆளு மிக்க தலைவர்களின் ஒருவரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் பலமுறை பல மேடைகளில் பேசி வந்திருக்கிறார்கள் ,சொல்லியும்  வந்திருக்கிறார். அது தான் உண்மையும் ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கின்ற மேலும் திராவிட இயக்கத்துக்கு கருத்தியலாக ஒருங்கிணைக்கின்ற ஒத்த  கருத்துள்ளார்.
அனைவருக்கும் ஒரே குடும்பம் அதுதான் முத்துவேல்  கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திராவிட இயக்கம்.
//
--
அருந்ததிய மக்களுக்காகக் கலைஞர் உருவாக்கிய உள் இடஒதுக்கீட்டு உரிமையை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றவர் திருமாவளவன். தி்மு.க.கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகள் தான். அந்தக் கட்சிகள் அனைத்துக்கும் எதிராக உச்சநீதி மன்றம் சென்ற கட்சி தான் விடுதலைச் சிறுத்தைகள்.
அதற்காக தி்.மு.க.கூட்டணியிலுள்ள யாரும் அவரை ஒதுக்கிவிடவில்லை. இது தான் கூட்டணி ஜனநாயகத்தின் அடையாளம். இது மன்னராட்சி இல்லை என்பதற்கும் அடையாளம்.
எனவே, திருமா அவர்களை தி.மு.க.வோ, அதன் கூட்டணிக் கட்சிகளோ "புத்தக வெளியீட்டுக்குப் போக வேண்டாம்" என அழுத்தம் கொடுத்ததாக நடிகர் விஜய்யும், அவரது பூ ணூ ல் சொந்தங்களும் மீண்டும் மீண்டும் கூறி வருவது தி.மு.க.வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கொச்சைப்படுத்துவதாகும்.
இந்தச் சிக்கலை உருவாக்கிக் கொண்டவர், இன்னும் சிக்கலை நீட்டிப்பவர்  திருமா அவர்கள் ..
AThi Asuran
//
--
விடுதலை சிறுத்தைகள் கட்சி போல் ஒரு பறையர்  ஜாதி கட்சி.  இந்த தமிழ்நாட்டில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால்  அதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் அளப்பரியா பங்களிப்பாகும்.
இதை திருமாவளவன் என்றும் மறக்க மாட்டார் என நான் நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அறிமுகம் செய்ததில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான தந்தை பெரியார் அவர்களே சாரும். டாக்டர் அம்பேத்கருடைய நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்து வீதி தோறும் கொண்டு சென்றவர் தந்தை பெரியார் ஆவார்.
ஏதோ அம்பேத்கர் என்றால் அது திருமாவளவன் தான் என்ற மாயையும் சேரியில் இருக்கின்ற பறையர்கள் அனைவரும் திருமாவளவன் பின் அணி திரண்டு இருப்பது போலவும் ஒரு பிம்மத்தை தொடர்ச்சியாக ஊடகம் மூலமாக விசிக நிரூபிக்க முயற்சிக்கிறது.
அவை அப்படி எல்லாம் இல்லை என்பதை பலமுறை தமிழ்நாடு உணர்த்திருக்கிறது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள பறையர்களின்  ஓட்டு திமுக கூட்டணிக்கு கிடைக்காது என புலம்புவது மன நோயாளிகளின் உச்சமென நான் கருதுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பறையருக்கு எதிரான கட்சி அல்ல,  தொடர்ச்சியாக சேரில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக தொடர்ச்சியாக மக்களோடு மக்களாக மக்கள் நலம் சார்ந்து பலர் திட்டங்களை அறிவித்து , என்றும் திமுக சேரி மக்களுக்கு துணையாக இருந்துள்ளது , இருந்து கொண்டிருக்கிறது. என்பதை வரலாறாகும்.
ஆக திருமாவளவன் இல்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்காது என்பது மல்லாந்து படுத்துக்கொண்டே தனது மேல்  எச்சில் துப்புவதாகும்.
திருமாவளவன் தான் முடிவெடுக்க வேண்டும் .
ஆதவ் அர்ஜுனா உடன் இருப்பதா ! அல்லது தமிழ்நாட்டின் கருத்தில் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோடு இருப்பதா என இறுதி முடிவு எடுக்க  வேண்டும்.
விரைவில் இறுதி முடிவு திருமாவளவன் அவர்கள் எடுப்பாரா? அல்லது அன்றாடும் ஊடக வெளிச்சத்தில் தன் பெயர் வர வேண்டும் என்பதற்காக இத்தகைய செய்தியை ஊக்குவிப்பாரா என்பது காலம் தான் தீர்மானிக்கும்.

@ மும்பை கதிரவன்

கருத்துகள் இல்லை: