திங்கள், 2 டிசம்பர், 2024

இந்தியாவே பின்பற்றும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் - தினத்தந்தி பாராட்டு !

இந்தியாவே பின்பற்றும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் - தினத்தந்தி பாராட்டு !

Kalaignar Seithigal -  Praveen : : தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிருக்கான மகளிர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வு முன்னேற்றம் கண்டுள்ளதாக கண்டு இந்த திட்டத்தை நாடே பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாரண அரசாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு தினத்தந்தி நாளேடு தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது.
இந்தியாவே பின்பற்றும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் - தினத்தந்தி பாராட்டு !
தினத்தந்தி சிறப்பு கட்டுரை பின்வருமாறு :
தமிழ்நாட்டில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதுபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வெறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது.



இந்தியா முழுவதும் மகளிருக்கு உரிமைத் தொகை என்ற வாக்குறுதியை கொடுத்து மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள், அந்த திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்திற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு தான்.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கார்டுகள் 2 1/4 கோடி. அதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 1.16 கோடி.

தமிழ்நாடு முன்னெடுத்த திட்டத்தின் வாயிலாக, இந்தியா முழுவதும் 9 கோடி பெண்கள் உதவித்தொகை பெறுகின்றனர்.

இனி விடுப்பட்ட மாநிலங்களில் எல்லாம் சட்டசபை தேர்தல்கள் நடக்கும் போது, மகளிர் உரிமைத் தொகை திட்டமே பிரதானமாக இருக்கும். இதுவே எதிர்கால இந்தியாவின் தேர்தல் மந்திரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை: