மாலை மலர் : சென்னை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் எம்.பி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்துசெய்ய முடியாது என அதிரடியாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதன், 12 ஜூலை, 2023
எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை கைவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக