hirunews :
hirunews.lk : இலங்கை மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பதிவு
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே, இன்றிரவு ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக