செவ்வாய், 11 ஜூலை, 2023

15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருச்சபை பாதிரியார்! மாரவில தேவாலயம் இலங்கை

 இலக்கியா இன்போ : com : 15 வயது  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருச்சபை பாதிரியாரை பொலிஸார் தேடி வருகின்றனர்: சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு நீதிமன்றம் உத்தரவு!
ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயது பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியாரை கைது செய்ய மாரவில பொலிஸாரின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பாதிரியார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவைப் பெற்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரங்களின்படி, சிறுமிக்கு நல்ல கல்வி தருவதாக வாக்குறுதியளித்து தேவாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு 2021 முதல் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Severe punishment must be given.