வியாழன், 22 டிசம்பர், 2022

மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர்!

minnambalam.com - Kalai  : மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி!
திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளரான மஸ்தானின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தநிலையில் அவர் இன்று(டிசம்பர் 22 ) திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் 1995 ல் இருந்து 2001 வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் மஸ்தான் தஸ்தகீர்(66).
இன்று அதிகாலை அவர் திருவல்லிக்கேணியில் இருந்து  தனது உறவினர் இம்ரான் என்பவருடன் காரில் புறப்பட்டு செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஊரப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.


கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மஸ்தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இருந்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மற்றும்  திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளராக இருந்து வந்தார் மஸ்தான்.

அவரது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று மாலை முழுவதும் உறவினர்களை அழைத்து பத்திரிகை வைத்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா

கருத்துகள் இல்லை: