ஞாயிறு, 18 டிசம்பர், 2022

டெக்ஸ்டைல் துறை -200 பில்லியன் டாலர் சந்தை! கண்ணீரில் மிதக்கிறது

tamil.goodreturns.in -  Prasanna Venkatesh  : ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பெரிய பொருளாதார நாடுகளில் உள்ள மக்கள் ஆடைகளுக்காகச் செலவிடும் தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளதால், இந்தியாவின் 200 பில்லியன் டாலர் டெக்ஸ்டைல் மற்றும் ஆடைத் தொழில் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை, கொரோனா-வுக்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருத்தி விலை அதிகமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.
பருத்தி விலை குறைந்த காலகட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் இத்துறை வளர்ச்சியின் கழுத்தை நெரித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
உலக நாடுகளின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் இந்தியா வலுவாக உள்ளது, இதேபோல் டாப் 10 முக்கியப் பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இந்தியா விடச் சிறப்பாகச் செயல்படும் நிலையில் இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை மட்டும் விதிவிளக்காக மாறியுள்ளது.

இந்திய ஜவுளித் துறை
இந்திய ஜவுளித் துறை 2022 ஆண்டில் அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை இழந்த நிலையில் 2023 ஆம் ஆண்டும் இது பெரும் பாதிப்பை ஏதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

4.5 கோடி வேலைவாய்ப்பு
இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் சுமார் 4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் ஒரு தொழில்துறையாக விளங்குகிறது. 2023 ஆம் ஆண்டும் மந்தமான வர்த்தகம் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் இத்துறையில் பணிநீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளது.

22 சதவீதம் ஏற்றுமதி
இந்திய டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் மொத்த வர்த்தகத்தில் சுமார் 22 சதவீதம் ஏற்றுமதி மட்டுமே பங்கு வகிக்கிறது.இத்துறை ஏற்றுமதி தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ள. நவம்பர் மாதம் மட்டும் கடந்த ஆண்டை விடவும் சுமார் 15% குறைந்து 3.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

விலை மற்றும் இறக்குமதி
இந்தியாவின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும் உள்நாட்டு விற்பனை மந்தமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான விலை மற்றும் மலிவான இறக்குமதி ஆடைகள் தான் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடை விற்பனை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட நிலையில், உள்ளூர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைக்கத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டில் அதிகப்படியான விலை, வெளிநாட்டு ஏற்றுமதி குறைப்பு ஆகியவை தான்.

உற்பத்தி சரிவு
உள்ளூர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உற்பத்தி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இது கொள்கை வகுப்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு
ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கின்சி அறிக்கை
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான 18 மாத வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, உலகளாவிய ஆடைகளின் சில்லறை விற்பனை அதிகப்படியான பணவீக்கம் மற்றும் நுகர்வோரின் மோசமான மனநிலை காரணமாகச் சரிவுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வாய்ப்புகளும் மிகவும் மோசமாக உள்ளதாகவே தெரிகிறது என்று மெக்கின்சி அறிக்கை கடந்த மாதம் தெரிவித்தது.

English summary
Indian Textile industry might be Trouble in 2023; local textile factories cuts production; jobs at stake
Indian Textile industry might be Trouble in 2023; local textile factories cuts production; jobs at stake

கருத்துகள் இல்லை: