மாலை மலர்: ராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக