மாலைமலர் : பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி சொந்த மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
அகமதாபாத்: பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து
அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, முன்னாள் மந்திரியான ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான ஹிமான்ஷு வியாஸ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக