ஊர் பொது இடத்தில் ஷெட் போட்டு இவரை அமர்த்திவிட்டோம் . ஆரம்பத்தில் உண்டியல் வைத்தோம் . ஷெட் போட்ட செல்வு 35 ஆயிரமும் உடனே சேர்ந்த்துவிட்டது . போதிய தொகை வசூலானதால் உண்டியலை எடுத்திட்டோம்
ரெகுலரா உண்டிய வக்கிரத்தில் எப்பெப்போ பணம் தேவையோ அப்போ மட்டும் வச்சுக்குவோம்
சித்தரை இப்படி பொது இடத்தில் வச்சிருக்கிறது நல்லா இல்ல
அதனால என் தோட்டத்தில் பெரிசா ஒரு ஆஸ்ரமம் கட்டி அதில சித்தரை வைக்கப்போறோம் .தாசில்தாரிடம் சொல்லிட்டேன்
அப்புறம் சித்தர் என் கஸ்டடியில் வந்துடுவார்
பழனி அருகே அழுக்கு மூட்டை சாமியார் பெரிய சித்தராக பாப்புலர் ஆகிட்டார் அவர் பேரில் ட்ரஸ்ட்டி இயங்குகிறது
அதை போய் பார்த்திட்டு வந்தேன் . அது மாதிரி ஒரு ட்ரஸ்ட்டி பார்ம் பண்ணி அவரை என் கஸ்டடிடியில் எடுத்துக்குவேன் .. ஆரம்பம் முதலே நான்தான் சாப்பாடு குடுத்திட்டு வர்றதால அவர் என் கஸ்டடிதான் என்பதில் சிக்கல் இல்ல... இப்படியே செல்லமுத்துங்கிற கேப்மாரி அளந்து கிட்டே போறான்
இவன் சொல்றாப்பல சம்பவங்கள் நடக்க நெறய சான்ஸ் இருக்கு நாட்டு நிலமை அப்படி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக