tamil.filmibeat.com : சென்னை: காமெடியாக பேசுகிறோம் என்கிற பெயரில் என்ன பேசுவதென்றே தெரியாமல் நடிகர் சதீஷ் தப்புத் தப்பாக பேசுகிறார் என மூடர்கூடம் படத்தின் நடிகரும் இயக்குநருமான நவீன் விளாசித் தள்ளி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஓ மை கடவுளே நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கள் சில எல்லை மீறி இருந்ததாக நெட்டிசன்கள் விளாசி வந்த நிலையில், தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சூட்டிங் ஸ்பாட்டில் நடிகையுடன் ஜாலியாக பேசுவதை போல நினைத்துக் கொண்டு பொதுவெளியில் பேசி மாட்டிக் கொண்டார் சதீஷ் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
நக்கு
ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டே பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிலும், சன்னி லியோன் பட நிகழ்ச்சியிலும் கண்ணியத்தை கடைபிடித்தார். ஆனால், சன்னி லியோனுக்கு ஜிபி முத்து ஆசையாக பால்கோவா ஊட்டி விடும் போது, ஜிபி முத்துவின் மைண்ட் வாய்ஸ் என்ன தெரியுமா என கிண்டல் அடிப்பது போல 'நக்கு' என அசிங்கமாக சதீஷ் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சேலையில் சன்னி
முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் முழு நிர்வாணமாக ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களில் நடித்து வந்தாலும், பாலிவுட் கவர்ச்சி நடிகையாக மாறிய பின்னர், பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களை கவர சேலை அணிந்து தான் வரவேண்டும் என நினைத்து சேலை அணிந்து சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பாராட்டும் விதமாக பேசி சிக்கலில் சிக்கிக் கொண்டார் சதீஷ்.
தர்ஷா குப்தா உடை பற்றி
பாலிவுட்டில் வந்த சன்னி லியோன் எப்படி சேலை கட்டி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நம்ம கோவை பொண்ணு தர்ஷா குப்தா எப்படி கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருக்கிறார் பாருங்க என சதீஷ் தர்ஷா குப்தாவின் உடை பற்றி சதீஷ் பேசியதற்கு பிரபல இயக்குநர் கண்டனம் தெரிவித்து இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
நவீன் விளாசல்
"சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்" என ட்வீட் போட்டு சதீஷ் பேசியது தப்பு தான் என விளாசி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக