செவ்வாய், 8 நவம்பர், 2022

Singapore rescues 300 suspected migrants from sinking boat மூழ்கிய கப்பலில் இருந்து 306 இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டனர்!

லங்காசிறி : சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.
படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்
இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.
அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா, ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். 

abcnews.go.con :

Sri Lanka’s navy says about 300 suspected migrants have been rescued by Singapore authorities after their boat started sinking.

Navy spokesman Indika de Silva said a Sri Lankan citizen in the boat contacted the navy on Monday and said they were in distress, and the Maritime Rescue Coordination Centre in Colombo sought help from Singapore, Vietnam and the Philippines.

Singapore authorities later notified Sri Lanka that the people on board the boat had been rescued and were heading to Vietnam.

Mr De Silva said the navy was officially aware of the presence of only one Sri Lankan on board the vessel and the identities of the others would be ascertained after they landed in Vietnam.

Sri Lankans in the past sometimes undertook hazardous illegal boat journeys to escape a long civil war.

Some Sri Lankans are now trying to escape an economic crisis by migrating illegally to other countries.

கருத்துகள் இல்லை: