jaffna muslim: ரணிலின் மிரட்டலில் மஹிந்தவின் சாம்ராஜ்யம், நாமலின் மனக்கணக்கு, கோட்டாவின் சிங்கள இமேஜ் சரிவடைந்ததா..?
Sunday, May 29, 2022 கட்டுரை
நிதியமைச்சர் பதவியை கொடுக்காவிட்டால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று கடந்த வாரம் ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பினாராம் ரணில்...
நிதியமைச்சு பதவிக்கு பொதுஜன முன்னணி எம்.பி ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே , அதிருப்தியடைந்த ரணில் அப்படி தகவல் அனுப்பினார்...
அடுத்த நாளே கூப்பிட்டு பதவியை கொடுத்தார் கோட்டா.. இப்போதெல்லாம் ரணிலுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்கிறார் ஜனாதிபதி.. அமைச்சர் பதவி கோரியவர்களைக் கூட , அதனை ரணிலிடம் பேசுங்கள் என்று கூறி ஒதுங்கியுள்ளார் கோட்டா.அதற்கு ஜனாதிபதியின் விட்டுக்கொடுப்பல்ல , வேறு வழியில்லை என்பதே சரியான காரணம்..
இப்போது ரணிலை நீக்கி ஆளுங்கட்சி எம்.பி ஒருவரை பிரதமராக்க , பொதுஜன பெரமுன சதி வேலைகளை செய்து வருகிறது,
இப்போது நாடு இருக்கும் நிலையில் , ரணிலும் கைவிட்டால் நாட்டின் கதி இன்னும் மோசமாகும்..
முன்னர் இருந்த ரணில் தான் இப்போதும் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் மேற்குலகத்தைப் பொறுத்தவரை முன்னர் இருந்த ரணில் அல்ல இப்போதிருப்பவர்.. அமெரிக்காவும் , இந்தியாவும் ரணிலுடன் சேர்ந்து வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டன.கூடவே ஜப்பான் போன்ற இதர நாடுகள் இணைந்துள்ளன..
ராஜபக்சமார் பொதுஜன பெரமுனவுக்குள் தான் பலம். மக்கள் மத்தியில் அவர்கள் ஆதரவுத்தளம் மிகவும் நலிவடைந்துவிட்டது..
ராஜபக்சமார் மேலும் இறுக்கினால் , ‘நான் வேலை செய்ய முயன்றேன். ஆனால் ராஜபக்சமார் என்னை விடவில்லை’ என்று ரணில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வெளியேறினால் கதை கந்தலாகி விடும்...
ராஜபக்சமார் பட்டறிவில் இருந்து பாடம் கற்கவில்லையென்றே தோன்றுகிறது...
மஹிந்த வளர்த்த அரசியல் சாம்ராஜ்யம் , நாமல் எண்ணிவைத்திருந்த பெரும் மனக்கணக்கு , கோட்டா சிங்களவர்கள் மத்தியில் வைத்திருந்த இமேஜ் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கிய காகம் இன்னமும் கரைந்துகொண்டிருப்பது நாட்டுக்கு நல்ல சகுணமல்ல. வீட்டுக்கும் தான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக