அய்யா விடுதலை விரும்பி அவர்கள் மருத்துவ மனையில் ....
Narasimman Naresh - ஆ.சிங்கராயர். : உண்மையான தொண்டனின் மரண சாசனம் இப்படியாகவே இருக்கும்.
அடிப்படை திமுக உறுப்பினர்கள் இப்படியானவர்கள். இவர்களின் எளித பிம்பத்தை மீசைகளும் ஆடம்பர மோதிரங்களும் மறைத்துவிடுகின்றன.
திமுக தொண்டர்கள் ஏன் இவ்வளவு பாசத்தோடும்,
ஒருவித வெறித்தனத்தோடும் பேசியும் சண்டையிட்டும் வர வேண்டும் என்று
நான்கூடப் பல நேரங்களில் சிந்தித்துண்டு.
ஆம், காரணமில்லாமலில்லை.
நானும் அய்யா பேராசிரியர் சுபவீ,அண்ணன் திரு.பொள்ளாச்சி உமாபதி அவர்களும் கோவை ஆவாரம்பாளயத்தில் தலைவரின் ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டம் பேசிவிட்டு வந்துகொண்டிருந்த போது அண்ணன் திரு.பொள்ளாச்சி உமாபதி அவர்கள் வாருங்கள் ஒரு முக்கியமான ஒரு நபரைப் பார்த்துவிட்டு வருவோம் என்று ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பார்த்தோம். பார்த்ததும் தங்களையறியாமல் கண்ணீர் வந்தது.
கையைக்கூடத் தூக்கமுடியாமல் தூக்கி நம் பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொண்டது அந்தக் கை.
பேச முயல்கிறார்.
ஆனால் பேச முடியவில்லை.
ஆனாலும் பேச முயல்கிறார்.
தட்டுத் தடுமாறி அவர் பேசியது..
சுபவீ. .
பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்ட நூலைப் படித்தீர்களா?
படித்திருக்கிறேன் அண்ணா.
இல்லேன்னா படிங்க.
படிச்சி இன்றைய இளைய தலைமுறையினரிடம் இந்தக் கருத்துக்களைச் சொல்லுங்க.
ஏன்னா
இதைச் சொல்ல உங்களைவிட்டா
வேறு ஆளில்லை.
நா உங்கள பெருசா நம்புறேன்.
சுபவீ உங்களுக்கு நல்ல புகழ் இருக்கு.
அதைவைத்து
பதவிகளுக்காக ஓடாமல்
சமூகத்திற்காக ஓடுவது என்னை ரொம்ப ஈர்கிறது.
உங்க செயல்பாடு என் மனசுக்குத் திருப்திகரமாக இருக்கு.
உமாபதியை உங்க கூடவே வெச்சுக்கங்க.
உமாபதி..
அண்ணா சொல்லுங்கண்ணா. .
நா செத்துட்டா
வீட்டிலிருக்கிற புத்தகங்கள், குறிப்புகளனைத்தையும்
நீ எடுத்துட்டுப் போய்டு.
இல்லன்னா
பசங்க என்னென்னு தெரியாம அதை
தூக்கிப் போட்றுவாங்க.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை மறைக்க,
அதன் பெருமையைக் குலைக்க RSS சதித்திட்டம் தீட்டுவதாகக் கேள்விப்பட்டேன்.
எனக்கு உடம்பு குன்றியதற்குக் காரணமே
இப்படியான கவலைகளால்தான்.
தலைவர் எப்படி இருக்கார்?
உடம்ப பத்திரமா பாத்துக்கச் சொல்லு.
நான் இறந்தால்
என் உடலில் கறுப்பு சிவப்புக் கொடி போத்தனும்.
ஆமா..
ஆனா ஒன்னுப்பா
நான் இறந்து எரியூட்டப்படும்போதுகூட
எரியும் நெருப்பு சிவப்பாகவும்,
அது விடும் புகை கறுப்பாகவும்தான் இருக்கும்.
எரியூட்டப்படும்போதுகூட கறுப்பு சிவப்புதான் எனச் சொல்லும்போது
நாங்கள் மூவரும் எங்களையறியாமல்
பீறிட்டு அழ...
நான் ஒரு குழந்தையை முத்தமிடுவதுபோல
முத்தமிட்டுவிட்டு
கண்ணீரோடு வெளியேற
அய்யாவும் அண்ணனும் மட்டும்
பற்றிய கையை விடுவிக்க மனமின்றி
நீண்ட நேரம் கால் கடுக்க நின்றுகொண்டே இருந்தார்கள்.
ஆம் நண்பர்களே
பட்டிதொட்டியெல்லாம் தமிழை, திராவிடத்தை விதைத்த மாமனிதனிவர்.
இவர்தான் முன்னாள் M.P .,
விடுதலை விரும்பி.
இறுதி நாட்களிலும் திமுக கறை வேட்டி..
திமுக பற்றியே பேசுகிறார்.
தலைவரைப்பற்றியே பேசுகிறார்.
பெரியாரைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
விதைத்தவர் உறங்கச் சென்றுவிடலாம்.
விதைத்த விதைகளாகிய நாம்
எப்படி உறங்க முடியும்.
அண்ணாமலைகளை அடித்து விரட்ட
திமுக என்கிற தடியை கையிலெடுப்போம்
வாருங்கள்.
நன்றி- ஆ.சிங்கராயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக