Sundar P : ஃபெரோஸ் காந்தி...
(செப்டம்பர் 12, 1912 - 8 செப்டம்பர் 1960)
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த பாராளுமன்றத்தின் ரேபரேலி தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஃபெரோஸ் காந்தி. இவர்தான் இந்திராகாந்தியின் கணவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர்..
அந்த காலகட்டத்திலேயே புலனாய்வு பத்திரிகை நடத்தியவர் ஃபெரோஸ்...
அந்த காலத்தில் நடந்த இமாலய ஊழல்களை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து நாட்டின் பொருளாதார சீரழிவை தடுப்பதில் பெரிய பங்காற்றினார்...
டால்மியா சிமெண்ட்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா க்ருப்புடைய முதலாளியான ராம்கிஷன் ஜெயின் செய்த பங்குச் சந்தை மோசடிகளை செய்தியாக்கி அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தார்
.அடுத்து ஹரிதாஸ் முந்த்ராவின் ஷேர்மார்கெட் ஊழல்.
எல்ஐசி ஷேர்களைக் கொள்ளையடித்து சுமார் ஒன்னேகால் கோடி சுருட்டினார். அது இப்போதைய மதிப்பில் 500 கோடி..
முத்ரா ஊழலை வெளிக்கொணர்ந்து தினம் தினம் பக்கம் பக்கமாக எழுதியதன் விளைவாக முந்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தார் ஃபெரோஸ் காந்தி...
அதே வழக்கில் சிக்கிய மற்றொரு பெரிய முதலை தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், அந்தாள் மத்திய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணம்மாச்சாரி...
இவர் தன் நிதியமைச்சர பதவியை இழந்தார்...
இவரது புலனாய்வில் சிக்கிய மற்றொரு புள்ளி JRD டாட்டா. ரயில் இஞ்சின் இறக்குமதி ஊழலில் சிக்கினார் டாட்டா..
இத்தனை மெகா ஊழல்களை துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டிய ஃபெரோசுக்கு மாமனார் ஜவகர்லால் நேருவின் ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்கது...
இவ்வாறாக குஜராத்தி மார்வாடிகளை இந்த நாட்டை கபளீகரம் செய்யவிடாமல் அரணாக காத்து நின்ற ஃபெரோஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே தனது 47வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது மரணம் சந்தேக மரணம் என்றும் விமர்சனங்கள் உலாவின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக