Shyamsundar - Oneindia Tamil : டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியில் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி நிலவிய போதும் அதை பயன்படுத்த முடியாமல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அனந்த் சர்மா, மனிஷ் திவாரி , குலாம்நபி ஆசாத் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் இருந்த ஜிதின் பிரசாத், யோகானந்த சாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் 21 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி, வலு இல்லாத தலைமை என்று பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் முறையாக தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. சோனியா காந்தியின் அழைப்பின் பெயரில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. 5 மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி, தலைவருக்கான உட்கட்சி தேர்தல், கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இன்று 21 தலைவர்களும் வைக்க வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக என்டிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று பின்னர் காங்கிரஸ் தலைமை மூலம் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக