puthiyathalaimurai.com : தி.மு.க எம்.பி. கனிமொழி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் குறித்து ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார். குறுக்கிட்ட கனிமொழி அமைச்சரை ஆங்கிலத்தில் பேசச் சொல்ல, அதை ஏற்று அவரும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உணவு மற்றும் பொது விநியோக துறை பற்றிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். அப்போது பேசிய, தி.மு.க எம்.பி.கனிமொழி, ``தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் ரேஷன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது?'' என்று கேள்வி எழுப்பினார்.
புதன், 16 மார்ச், 2022
நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி எம்.பி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக