அவருடன் இருந்த அமானி தான்ஜி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கடும் மனஉளைச்சலில் இருந்த அவர், கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அவர் தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லொக்காவுக்கு உதவிய சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.
இதில், மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம். இது ஒரு சர்வதேச வழக்கு. எனவே, எங்களது எல்லையைக் கடந்து நாங்கள் விசாரிக்க முடியாது. அதனால்தான், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரிக்கை விடுத்தோம்” என்றனர்.
கோவை போலீஸாரின் கோரிக்கையை அடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கை விசாரணைக்கு எடுத்துவிட்டனர். முதல்கட்டமாக, இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள, லொக்காவின் கூட்டாளிகள் இந்தத் தகவலை போலீஸாரிடம் கூறியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லொக்காவுடன் இருந்த அமானி தான்ஜிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது. தான்ஜியின் கணவரும் கேங்ஸ்டர்தான் என்றும், அவரது மரணத்துக்கு அங்கொட லொக்காதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, லொக்காவை பழிவாங்குவதற்காக அவர் திட்டமிட்டு நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென்று எப்படி மாரடைப்பு வரும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், பிரேதபரிசோதனை முடிவுகள் வெளியானதால்தான் இது கொலையா, இயற்கை மரணமா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.
இலங்கையில் தங்க ஆபரணங்கள், ஸ்டைலான கெட்அப்புடன் வலம் வந்த, அங்கொட லொக்கா, கோவையில் நம் ஊர் கெட்அப்புக்கு மாறி, குறுந்தாடி, சந்தனப்பொட்டு சகிதம் வலம் வந்துள்ளார். போலியான பெயரில், இரண்டு முகவரிகளில் அவர் ஆதார் கார்டு வாங்கியுள்ளார். இந்த வழக்கில் போலீஸார் சில விஷயங்களை கோட்டைவிட்டதாகவும் கூறப்படுகிறது. “சிவகாமி சுந்தரி கொடுத்த ஆவணங்களை அப்போதே சரிபார்த்திருந்தால் அவர்களை கையும், களவுமாக பிடித்திருக்கலாம்.
முக்கியமாக, கோவையில் இறந்ததாகச் சொல்லப்படும் அவரது உடலை, எதற்காக மதுரைக்கு சென்று எரியூட்ட வேண்டும்? இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால்தான், உண்மை நிலவரம் வெளியில் வரும் என்கின்றனர்” விபரம் அறிந்தவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக