வியாழன், 6 ஆகஸ்ட், 2020

பணம் சம்பாதிக்க திமுகவிலிருந்து விலகினேன்: கு.க.செல்வம்

பணம் சம்பாதிக்க திமுகவிலிருந்து விலகினேன்: கு.க.செல்வம்மின்னம்பலம் : திமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், திடீரென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை என்று செல்வம் கூறிவிட்டார். இதன் எதிரொலியாக செல்வத்தின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, அவர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.நிரந்தர நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு நீக்கினாலும் கவலையில்லை என்று தெரிவித்தார்.இந்த நிலையில் சென்னையிலுள்ள தனது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கு.க.செல்வம் இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவில் வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன். கட்சியில் இருக்கப் பிடிக்காததால் பொறுப்பிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள் என 10 நாட்களுக்கு முன்பே கூறிவிட்டேன். எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காததற்காக திமுகவிலிருந்து விலகவில்லை. குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்” என்று தெரிவித்தார்.

வயதாகிவிட்டது, உடல்நிலை சரியில்லை, பணம் இல்லை என்பதற்காக தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்ட கு.க.செல்வம், “இனிமேல் பணம் சம்பாதிக்க வேண்டும், உடல்நலனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திமுகவிலிருந்து விலக முடிவு செய்தேன். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. திமுகவிலிருந்து யாரையும் நான் என்னுடன் அழைக்கவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்.

திமுக தலைமை விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதம் தனக்கு கிடைக்கவில்லை எனவும், அந்த கடிதம் கிடைத்த பின்னர் என்ன விளக்கம் கேட்கப்பட்டதோ அதற்கு பதிலளிக்க உள்ளதாகவும் செல்வம் தெரிவித்தார்.

எழில்

கருத்துகள் இல்லை: