புதன், 31 ஜூலை, 2019

தகவலறியும் சட்டத்தைக் கண்டு பாஜக ஏன் மிரண்டது? ஐந்து முக்கிய காரணங்கள் ... ஜெய்ராம் ரமேஷ்

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : தகவலறியும் சட்டத்தைக் கண்டு மிரண்டவர் யார்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஏன் மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கிறது? நேற்று பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் ஐந்து காரணங்களைக் கூறினார்.
1. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் பிரதமர் மோடியின் உண்மையான கல்வித் தகுதி என்ன என்ற ரகசியம் வெளி வந்தது.
2. நான்கு கோடி போலி ரேஷன் அட்டைகள் களையெடுக்கப் பட்டிருக்கின்றன என்று மோடி பாரளுமன்றத்தில் கூறிய தகவல் தவறு. உண்மையில் 2.3 கோடி அட்டைகள்தான் களையப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் இந்தச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டது. மோடியின் தவறான தகவலை இதனால் அரசாங்கம் திருத்த வேண்டி வந்தது.
3. செல்லாப் பண நடவடிக்கையை மோடி அறிவிப்பதற்கு 4 மணி நேரம் முன்பு ரிசர்வ் வங்கி அந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் என்கிற அரசின் வாதங்களை நிராகரித்தது என்ற தகவலும் இச்சட்டத்தின் வாயிலாக வெளியானது.
4. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் மோடி பதவிக்கு வந்த எட்டு மாதங்கள் ஆகியிருந்த போதே வங்கிகளில் வாராக்கடன் வைத்திருப்பவரின் பட்டியலை அவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் நடவடிக்கை இல்லை. தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் இது.
5. தகவலறியும் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்திய ஆணையம் மோடி அரசு வெளி நாட்டிலிருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தது என்று அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


பொய்த் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் சங்க பரிவாரத்தின் வல்லுனர் குழுவுக்கு உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டு வரும் ஒரு சட்டம் ஒரு பாராமாகத்தானே இருக்கும்? அதுவும் மேதகு பிரதமரை அம்பலப் படுத்தும் சட்டம் எப்படி உயிர்த்திருக்க முடியும்?

கருத்துகள் இல்லை: