திங்கள், 29 ஜூலை, 2019

தனி ஆளா 3 பேரை கொன்னேன்.. குளிச்சுட்டுதான் கிளம்புனேன்.. நான் ஒரு சைக்கோ.. ஷாக் தந்த கார்த்திகேயன்

நான் ஒரு சைக்கோ     tamiloneindia :நெல்லை: "நான் ஒருத்தனே தன்னந்தனியாக 3 கொலைகளையும் செய்தேன்.. கொலை பண்ணிட்டு அங்கேயே குளிச்சிட்டுதான் கிளம்பினேன்.. ஏன்னா நான் ஒரு சைக்கோ" என்கிறார் உமா மகேஸ்வரியை கொலை செய்த குற்றவாளி கார்த்திகேயன்.

வேலைக்கார பெண்
வாக்குமூலம் கொலை நடந்த அன்று சந்தேகப்படும் படியாக ஒரு கார் 2 முறை உமா மகேஸ்வரியின் வீட்டை கடந்து செல்லவும், அந்த கார் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
அது திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் தேடி வந்தநிலையில், அவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனடியாக அவர் நெல்லை கொண்டு வரப்பட்டு கமிஷனர் பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அதிகாரிகள், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது போலீசில் கார்த்திகேயன் சொன்னதாவது:



கொலை வெறி

"முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியால் என் அம்மா சீனியம்மாள் அரசியலில் வளரவே முடியாமல் போய்விட்டது. எங்க அம்மா வாழ்க்கையே அழிந்து போய்விட்டது.. எனக்கு சின்ன வயசில் இருந்தே உமா மகேஸ்வரியை தீர்த்து கட்டணும்னு வெறி. அதுக்குதான் சரியான நாள் பார்த்துட்டே வந்தேன். ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள். அதனால் போலீசார் எல்லாம் அங்கே போயிடுவாங்கன்னு நினைச்சுதான் அந்த நாளை கொலை செய்ய தேர்வு செஞ்சேன்.


முருக சங்கரன்

உமா மகேஸ்வரி வீட்டு பக்கம் காரில் ஒரு ரவுண்டு வந்தேன்.. யாரும் இல்லை என்று தெரிந்ததும் ஒரு சர்ச் வாசலில் காரை நிறுத்திவிட்டு, உமா மகேஸ்வரி வீட்டுக்கு என்னை பார்த்ததும் உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் என்ன வி‌ஷயம்னு கேட்டார். உங்ககிட்ட என் அம்மா பேசிட்டு வர சொன்னாங்க என்றேன்.


வெளியே போ

சோபாவில் உட்கார்ந்த நான், உங்களாலதான் எங்க அம்மா அரசியல் வாழ்க்கையே நாசமா போச்சுன்னு சொன்னேன். உள்ளே இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரி, இப்படியெல்லாம் பேசாதே, வெளியே போன்னு சொன்னாங்க. அப்பதான் ஆத்திரம் வந்து கத்தியை எடுத்து குத்தினேன்.முருக சங்கரன் அலறிக் கொண்டே என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். உடனே அவர் பெட்ரூமுக்குள் ஓடினார். ஆனாலும் அவரை கீழே தள்ளி உடம்பெல்லாம் குத்திட்டேன். ரெண்டு பேரும் செத்துட்டாங்க.


வேலைக்கார பெண்

நகைக்காக கொலை நடந்ததாக தெரிய வேண்டும் என்று கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்து கொண்டேன். பீரோவையும் கலைத்து விட்டேன். அப்போது யாரோ கேட் திறக்கும் சத்தம் கேட்கவும், மறைந்திருந்து பார்த்தேன். வேலைக்கார பெண் மாரி உள்ளே இதனை பார்த்துவிட்டார். அதனால் அவரையும் தப்பவிடாமல் கிச்சனுக்கு இழுத்து சென்று கத்தியால் அவரை குத்தினேன். ஆனால் அவர் சாகவே இல்லை.. அதனால் அங்கிருந்த பாத்திரங்களால் தலையில் வேகமாக அடித்து கொலை செய்தேன்.


தடயங்கள்

வீடு முழுக்க தடயங்களை அழித்தேன்.. கைரேகைகளை அழித்தேன். கொலை செய்த கத்தி, நகைகள் வைத்திருந்த பைக்குள் கழுவி போட்டுக் கொண்டேன். என் உடம்பில் ரத்தக்கறைகள் இருந்தது. அதனால் நான் பாத்ரூம் போய் குளித்துவிட்டேன். பிறகு வெளியே வந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டேன். போற வழியில்தான் என் அம்மாவுக்கு தகவல் சொன்னேன். அவங்க பதறிட்டாங்க.


நான் ஒரு சைக்கோ

நான் காரில் அப்படியே தாமிரபரணி ஆத்துல போய் நகைகளையும், கத்தியையும் வைத்திருந்த பையை ஆத்துல வீசிட்டு போய்டேன். எந்த கூலி படையும் இதுக்கு இல்லை. நான் மட்டும்தான் தன்னந்தனியாக கொலை செய்தேன்.. ஏன்னா.. நான் ஒரு சைக்கோ" என்று சொல்கிறாராம் கார்த்திகேயன். எத்தனை முறை கேட்டாலும் இதையேதான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறாராம். எனினும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: