tamil.oneindia.com - lakshmi-priya. :
டெல்லி: நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.
கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அவசியமாகும். எதிர்க்கட்சியின் மதிப்பையும் தேவையையும் உணர்ந்துள்ளோம். மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மக்களவையை
சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மோடி கேட்டு
கொண்டார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் கூறுகையில் அவசர சட்டம் மூலம் ஒரு சட்டத்தை இயற்றுவது ஜனநாயகத்தில்
மிகவும் மோசமான நடவடிக்கை. இதை ஏதாவது அவசர காலத்தில் தீவிர
பிரச்சினைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால்
சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்தையே அரசு பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து
பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அரசால்
பின்பற்றப்பட்ட அந்த நடைமுறை மாறுகிறதா என தெரியவில்லை.
மக்களவையில்
தனக்கு உள்ள பெரும்பான்மை காரணமாகவே அரசு சில சட்ட மசோதாக்களை கொண்டு
வந்தது. இதற்கு நாடாளுமன்றத்தை ஒரு ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தியது.
பெரும்பாலான சட்டமசோதாக்கள் ஆய்வுக்காக நிலைக் குழுவுக்கு
அனுப்பப்படவில்லை. இந்த நடவடிக்கை மீண்டும் தொடராது என காங்கிரஸ்
நம்புகிறது என ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.
கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அவசியமாகும். எதிர்க்கட்சியின் மதிப்பையும் தேவையையும் உணர்ந்துள்ளோம். மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக