தினமலர் : கெய்ரோ : எகிப்து நாட்டில் அதிபராக முகமது மோர்சி 67 இருந்த போது, இவரை பதவி விலக கோரி பலமுறை போராட்டங்கள் நடந்ததை ஒட்டி, ஜூலை 2013 ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்தார் அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக