zeenews.india.com: தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
கோடை ஆரம்பித்ததில் இருந்தே தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் பகல் இரவு பாராமல் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு அலையும் காட்சி ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. தண்ணீர் வழங்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் காலிக்குடங்களை சாலையில் வைத்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. சராசரி மழையை விட குறைவாக மழைப் பெய்ததே இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன.
இந்நிலையில், குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 ஆம் தேதி முதல் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
உள்ளாட்சி துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக