ஞாயிறு, 16 ஜூன், 2019

நைஜீரியாவில் கிறிஸ்தவ கிராமவாசிகள் மீது பயங்கரவாதிகள் வெறியாட்டம் - சுமார் 100 பேர் படுகொலை

Gunmen have killed nearly 100 people in an attack on a village in the Mopti region in central Mali. House

நைஜீரியாவில் கிராமவாசிகள் மீது கொள்ளையர்கள் வெறியாட்டம் - 35 பேர் படுகொலைமாலைமலர் :நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் கிராமவாசிகள் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜர்:
 கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.
இதுதவிர அந்நாட்டின் சில மாநிலங்களில் காட்டுப் பகுதியில் மறைந்து வாழும் கொள்ளையர்கள் அவ்வப்போது அருகாமையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதுடன், தடுக்க முயலும் சிலரை சுட்டுக் கொல்கின்றனர். வீடுகளை கொளுத்தி நாசப்படுத்துவதுடன் கால்நடைகள் மற்றும் இளம்பெண்களை கடத்திச் செல்வதுமுண்டு.


இந்நிலையில், நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாநிலத்துக்குட்பட்ட டுங்கர் கபாவ் மற்றும் கிடான் வாவா ஆகிய கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவில் ஒரு கொள்ளையர் கும்பல் புகுந்தது.

துப்பாக்கி, வெட்டரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வைத்திருந்த பணம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்ததுடன் 35 பேரை ஈவிரக்கிரமின்றி கொன்று குவித்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரத்தில் இதேபோல் நைஜர் மாநிலத்தில் உள்ள கிராமங்களை சூறையாடிய ஒரு கும்பல் சுமார் 40 பேரை கொன்று கோரத்தாண்டவமாடியது நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை: