Magnitude 7.2 earthquake strikes near L'Esperance Rock, New Zealand
தினத்தந்தி :நியூசிலாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
வெல்லிங்டன், நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் கடுமையான மற்றும் தீங்கு விளைவிக்கும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என தொடக்கத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னர் இதனால் நியூசிலாந்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக