வியாழன், 22 மார்ச், 2018

சந்தையூர் அருந்ததியர் முஸ்லீம் மதம் மாற முடிவு ... விடியோ பேட்டி


பறையர் ஜாதிவெறிக்கு எதிர்கொள்ள முடியாமல் சந்தையூர் அருந்ததியர் மக்கள் முஸ்லீம் மதம் மாற முடிவு செய்து இன்று அறிவித்தனர் .
தமிழகத்தில் உள்ள அனைத்து சேரிகளில் பறையர் ஜாதிவெறியை எதிர்கொள்ள முடியாமல் அருந்ததியர் மக்கள் போராடி வருகிறார்கள் .
இவைகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ஜாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் இருப்பது மிகவும் வெட்கக்கேடான அவமானம் ஆகும் .
சேரில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடாமல் ஜாதி ஒழிப்பு என்பது நிறைவு ஆகாது என்பது பெரியாரிய இடதுசாரி அமைப்புகள் புரிந்துகொள்ளவேண்டும் .
சுமார் 55 நாளாக போராடிவரும் அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து கள்ள மௌனம் இருந்து வருவது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும் .

கருத்துகள் இல்லை: