Shankar A :
குட்கா வியாபாரி டிஜிபியாக இருக்கும் வரையில் இன்னும்
என்னென்ன அவமானங்களை காவல்துறை சந்திக்கப் போகிறதோ என்று தெரியவில்லை.
இப்படி ஊரே சபித்தும், பதவியில் ஒட்டிக் கொண்டு ஒரு புழு கூட இருக்காது. ஆனால் குட்கா வியாபாரி இருப்பார்.
மாலைமலர்: சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் சபீரா பானு என்பவர் இன்று விஷம் அருந்திவிட்டு காவல் நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.& காவலர்கள் தற்கொலை தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய முதல்வர், போலீசாரின் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்திருப்பது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை:
சென்னை
கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் 2 காவலர்கள்
தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தின் வெளியே இன்று
மாலை தேனி மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள ரகு, கணேஷ் ஆகியோர் உடலில்
மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர்.
இதனை
கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச்
சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு
செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத
நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு
இடமாற்றம் செய்கின்றனர் என அடுக்கடுக்காக புகார் கூறினர்.
மாலைமலர்: சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் சபீரா பானு என்பவர் இன்று விஷம் அருந்திவிட்டு காவல் நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.& காவலர்கள் தற்கொலை தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய முதல்வர், போலீசாரின் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்திருப்பது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக