சனி, 24 மார்ச், 2018

திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் மகளை கொன்ற தந்தை.. கேரளாவில் ஆணவ படுகொலை


Shyamsundar -Oneindia Tamil 
 திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். திருவனந்தபுரம்: திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக ஆதிராவின் தந்தை ராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 
ஆதிராவும், அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரும் 2 வருடமாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நேற்று நாடு இரவில் ஆதிரா அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். 
 முதலில் ஆதிராவின் காதலுக்கு ராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. மாப்பிள்ளை ராணுவ வீரராக இருந்தாலும், தலித் என்பதால் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார். மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டும் கூட கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.
ஆனால் சில நாட்களுக்கு பின் ஆதிராவின் உறவினர்கள் பேசியதன் பேரிலும், ஆதிராவின் அம்மா பேசியதின் பேரிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு திருமணத்தில் எந்த விஷயமும், சம்பிரதாயமும் செய்ய மாட்டேன், திருமணத்திற்கு பின் மாப்பிள்ளை என் வீட்டிற்கு வர கூடாது என்று நிறைய நிபந்தனைகள் விதித்துள்ளார். 
பெரிய சண்டை பெரிய சண்டை இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் 8 மணி நேரத்திற்கு முன் ஆதிராவை கூப்பிட்டு தனியாக பேசியுள்ளார் ராஜன். அப்போது ராஜனுக்கும் ஆதிராவிற்கும் எதோ சண்டை வந்துள்ளது. 
ஆதிராவை மோசமாக தாக்கி அடித்துள்ளார். பின் கத்தியால் 8க்கும் அதிகமான முறை குத்தியுள்ளார். கைது கைது இதனால் அந்த பெண் அந்த இடத்திலேயே மயங்கி உயிருக்கு போராடி உள்ளார். உறவினர்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிரா மரணம் அடைந்துவிட்டார். தற்போது ராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: