Shyamsundar- Oneindia Tamil
டெல்லி: மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஊழல்வாதி
என்று கூறியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது வருத்தம்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊழல் கறைபடிந்தவர்கள் என்ற பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சில
நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய
போக்குவரத்துத்துறை நிதின் கட்கரி பெயரும் இருந்தது.
இதையடுத்து நிதின் கட்கரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தன்னுடைய புகழுக்கும், வாழ்க்கைக்கும்
அரவிந்த் கெஜ்ரிவால் பங்கம் விளைவித்துவிட்டார் என்று மான நஷ்ட வழக்கு
தொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
தான் கூறியது மிகவும் தவறான கருத்து என்று நீதிமன்றத்தில் தன்னுடைய
வருத்தத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் நிதின் கட்கரி தன்னுடைய
வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்.
இதனால் சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த பிக்ராம் சிங் போதைப் பொருள்
பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் புகார் அளித்து இருந்தார். பின் அந்த
புகார் தவறு என்று கூறி சில நாட்களை முன்பு மன்னிப்பு கேட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக