தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு நூறு நாட்களை கடந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி பூரித்துப்போய் இருக்கிறார்.
அத்தோடு முதல்வரை எம்எல்ஏக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியும் இடைவிடாது பெய்யும் மழையை போல நடந்து வருகிறது. அதில் தொகுதி வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதோ இல்லையோ தங்களது வளர்ச்சி பற்றி தவறாமல் பேசுகிறார்களாம்.
இதேபோல பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், ஆண்டிப்பட்டி தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி மறவாமை குறித்து முதல்வருக்கு பாடம் எடுத்தார்களாம். அதில் வெற்றிவேலும்,தங்க தமிழ்செல்வனும் டிடிவி தினகரனிடம் எம்எல்ஏக்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இந்த நன்றி மறவாத எம்எல்ஏக்கள் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், நீங்க உட்கார்ந்து இருக்கற பதவி சின்னம்மா கொடுத்தது. அம்மா இருந்த காலத்திலேயே உங்களை முதல்வர் பதவிக்கு கொண்டு வர முயற்சி செஞ்சவங்க சின்னம்மா.
ஆனா அதையெல்லாம் மறந்திட்டு நன்றி இல்லாம நடந்துக்கறீங்க. சின்னம்மா இல்லன்னா உங்களுக்கு முதல்வர் பதவி கிடைச்சிருக்குமா? அதெல்லாம் விட்டுட்டு நீங்க அவங்களை கட்சியை விட்டு நீக்கிறத்துக்கு வேலை பார்க்குறீங்க. ஜெயகுமாரும்,வேலுமணியும் ஆயிரம் சொல்வாங்க.. நீங்க அதை ஏத்துக்க கூடாது.நீங்களும் பதவியை காப்பாத்தீக்க பாக்குறீங்க.சின்னம்மாவுக்கு விசுவாசமா இல்லன்னா நீங்க நன்றியை மறந்தவங்கதானே? என்று விலாசினார்களாம். ஆனால் எடப்பாடியாரோ, நான் இப்ப வாய் திறந்தா ஆட்சிக்கே ஆபத்து வரலாம். உங்களுக்கு தெரியாதது இல்ல. அம்மா எவ்வளவு சிரமப்பட்டு ஆட்சி அமைச்சாங்க. சின்னம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை காப்பாத்தினாங்க. அப்படி இருக்கும்போது நான் நன்றி இல்லாம இருப்பேனா? அதிகாரபூர்வமா எங்காவது சின்னம்மா குடும்பத்தை நீக்க அறிவிப்பு வந்திருக்கா? இப்பவும் சின்னம்மா குடும்பத்தினர் என்னோடு பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா? நான் எப்பவும் சின்னம்மா ஆளுதான் என்று அதிரடித்தாராம். ஓ..அப்ப பன்னீர் தரப்பு சொல்வது எல்லாம் சரியாத்தான் இருக்கும்போல..? லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக