""ஹலோ தலைவரே, தமிழகமே இப்ப, ரஜினி < உண்டாக்கிய பரபரப்பில் மூழ்கியிருக்கு.; நான் எப்ப வருவேன். எப்படி
வருவேன்னு எனக்கே தெரியாதுங்கிற டயலாக் வாய்ஸை 20 வருசத்துக்கு முன்பே ரஜினி கொடுக்க ஆரம்பிச்சார். அந்த வாய்ஸ்தான் இப்பவும் அவர்ட்ட இருந்து ரீமிக்ஸில் வந்திருக்கு.'' ""ஆமாம்ப்பா. அதேபோல் 20 வருசத்துக்கு முன்ன, அவர் யார் யாரை எல்லாம் சந்திச்சாரோ, அவங்களை எல்லாம் இப்பவும் சந்திக்க ஆரம்பிச்சிருக்காராமே?'' ""உண்மைதாங்க தலைவரே, அவரோட பழைய நண்பர்கள் சிலரை அவர் சந்திச்சிக்கிட்டிருக்கார். அந்த வரிசையில் 20-ந் தேதி காலைல, தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனை சந்திச்சார். ஜெகத் வீட்டுக்கு ரஜினி வருவதா சொல்ல, நானே வர்றேன்னு ரஜினியோட வீட்டுக்குப் போயிட்டார் ஜெகத். அப்ப ரஜினி, "நான் அரசியல் கட்சியை ஆரம்பிச்சா, என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அதை எல்லாம் எப்படி சமாளிக்கலாம்'ன்னு கேட்டிருக்கார். அதோட, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது நடந்த விசயங்கள் குறித்தும், இந்த சந்திப்பின் போது ஜெகத்கிட்ட விரிவாக கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாராம் ரஜினி. மன்மோகன்சிங் பீரியடில் தி.மு.க. சார்பில் மத்திய இணையமைச்சரா இருந்த ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் பா.ஜ.க. அரசின் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி பரபரப்பை உண்டாக்குனது. அவரைத்தான் ரஜினி சந்திச்சிருக்காரு.''
""பா.ஜ.க.வின் ரெய்டுகள் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கிக்கிட்டிருக்கே?''’
""நாட்டின் மீதான அக்கறையில் நடவடிக்கைகளை எடுக்காமல், தங்கள் வளர்ச்சிக்கும் எதிரிகளை மிரட்டிவைப்பதற்கும், தன்னோட விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்தி வருதுன்னு எல்லாத் தரப்புமே புகார் எழுப்புது. அண்மையில் காங்கிரஸ் பிரமுகர் ப.சிதம்பரத்தைக் குறிவைச்சி நடத்தப்பட்ட ரெய்டிலும், ஐ.டி. அதிகாரிகள் எதையும் கைப்பற்றலை. சோனியாவுக்கு கட்சியில் ஆலோசனை சொல்லும் இடத்தில், முன்பு பிரணாப் முகர்ஜி இருந்தார். இப்ப ப.சி.யும் குலாம்நபி ஆசாத்தும்தான் இருக்காங்க. இவர்கள்ல ப.சி. போல்ட்டா கருத்துகளைச் சொல்றவர். தமிழக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க., தன் ஆசைக்குப் ப.சி., பெரிய இடையூறா இருப்பார்ன்னு நினைச்சிதான், ரெய்டு மூலம் அவருக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்குன்னு, டெல்லியில் பரபர டாக் அடிபடுது. அதே நேரத்தில் ஐ.டி. ரெய்டுகளின் பின்னணியில் கலெக்ஷனும் நடக்குதாம்.''’
""இது வேறயா?''’
""சமீபத்தில் பிரபல நிறுவனத்தில் பலமான ரெய்டு நடந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஆரம்பத்தில் கேரளாவில் கடை வச்சிருந்தவர். படிப்படியா முன்னேறி, அவர் இன்று மிகப்பெரிய ஆலமரமா, தன்னோட நிறுவனத்தை வளர்த்திருக்கார். அவரோட மகன்களுக்கிடையிலான பிரச்சினையில், ஒரு மகன் வருமான வரித்துறைக்குப் போட்டுக் கொடுத்ததன் பேரில்தான் ரெய்டே நடந்திருக்கு. இந்த விவகாரத்தில் கேரளாவின் பிரபல பெண் சாமியாரான மாதா அமிர்தானந்தமயி உள்ளே நுழைஞ்சி, சில மாயாஜால வேலைகளைச் செய்திருக்கார். இதன் அடிப்படையில் நிறுவன அதிபர், வருமான வரியா 1300 கோடி ரூபாயை ஒரே செக் கொடுத்து கட்டிட்டார். இந்த மாயாஜாலத்துக்கு தட்சணையா 150 கோடியை சாமியாரிணிக்குக் கொடுத்திருக்கார். அந்தத் தொகை கொல்லைப்புறமா கேரள பா.ஜ.க.வின் கல்லாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கு.''’
""நல்ல கலெக்ஷன்தான்''’
"இதுமட்டும் இல்லீங்க தலைவரே. முன்னாள் தமிழகத் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும் அவர் மகன் வீட்டிலும் நடத்தப்பட்ட ரெய்டுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. பா.ஜ.க. கையாளும் இதே டெக்னிக்கைத்தான் நம்ம தமிழக அரசியல் தலைகளும் இப்ப பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. சிட்டி கமிஷனரா டி.கே.ராஜேந்திரன் இருந்தப்ப, வட சென்னையைச் சேர்ந்த போதைப் பாக்கு வியாபாரிகளான மார்வாடிகள் தொடர்பான ரெய்டு நடந்தது. அப்ப, ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் சிட்டி லிமிட்டில் இருக்கும் பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகளுக்கு, எவ்வளவு மாத மாமூல் போகுதுங்கிற குறிப்பும் இருந்தது. இது சர்ச்சையானதோட, இது தொடர்பா விசாரிக்கணும்னு டி.கே.ராஜேந்திரனுக்குப் பிறகு சிட்டி கமிஷனரா வந்த ஜார்ஜ், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனா, கமிஷனர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை விசாரிக்க, டி.எஸ்.பி ரேங்க்கில் உள்ள அதிகாரி நியமிக்கப்பட்டார். அதனால் அந்த விவகாரம் அப்படியே, ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கு. இதே போலத்தான் கொடநாட்டுக் கொலை விவகாரமும், தீர்வை எட்டமுடியாமல் அரசியல் புள்ளிகளால் திணறிக்கிட்டிருக்கு.''’
""ஆமாம்ப்பா, இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கிட்ட நடத்தப்பட்ட விசாரணை எப்படி இருந்ததுன்னு, போன நக்கீரன் இதழ்ல "கொடநாட்டில் ஓ.பி.எஸ்.ஸின் ரகசிய ஃபைல்'ங்கிற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையே வந்திருந்ததே. ஆறுக்குட்டிக்கிட்ட போலீஸ் விசாரணை நடத்தும் படத்தைப் பார்த்தால், அது விசாரணை மாதிரியே தெரியலை. ஏதோ ஆறுக்குட்டி ஆய்வுக்குப் போனது மாதிரில்ல இருக்கு''’
""உண்மைதாங்க தலைவரே, போன பீரியடில் ஜெ.’ முதல்வராக இருந்தப்ப, ஐவரணி அமைச்சர்கள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்ப ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன் போன்றவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எல்லாம் கொடநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்ததாம். இருந்தும் ஆறுக்குட்டிக்கிட்ட முழுமையா, தீவிரமா விசாரணை நடத்தமுடியலையாம். ஏன்னா, ஓ.பி.எஸ். அணியில் உள்ள ஆறுக்குட்டியும் எடப்பாடி கேபினட்டின் பவர்ஃபுல் அமைச்சர்களில் ஒருவரான வேலுமணியும் மிகவும் நெருக்கமானவங்க. பதவிக்காலம் முடியப்போகும் நிலையில் இருக்கும் டி.ஜி.பி.யான டி.கே. ராஜேந்திரன், பதவி நீட்டிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், எடப்பாடி தரப்பையும் ஓ.பி.எஸ். தரப்பையும் அனுசரிச்சிப்போக வேண்டியவராக இருக்கார்ன்னு டிபார்ட்மெண்ட் ஆட்களே சொல்றாங்க.''
""டிபார்ட்மெண்ட் ஆட்கள்கிட்டே நானும் பேசினேம்ப்பா... டி.ஜி.பி.க்கு ஜூன் மாசம் ரிடையர்மெண்ட். அவர் பொண்ணுக்கு ஒரு தனியார் மருத்துவ பல்கலைக்கழக குடும்பத்தில் திருமணம் நடக்குது. அதனால் ரிடையராகிறவரை தன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மூலம் காய் நகர்த்துறாராம். 2019 வரை சர்வீஸ் இருக்கும் போலீஸ் உயரதிகாரி மகேந்திரன், டி.ஜி.பி. போஸ்டிங்குக்கு தமிழன்தான் வரணும்னு அதே சத்தியமூர்த்தி மூலம் தனக்காக முயற்சி பண்ணுறாராம். திரிபாதியின் முயற்சிகளை போனமுறையே சொல்லியிருக்கோம். ஜார்ஜும் ரேஸில் இருக்காரு. எல்லோருமே உளவுத்துறை மூலமா மூவ் பண்றதால உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, "நான் எதற்கு இந்தப் பதவியில் இருக்கணும்'னு விரக்தியா சொல்லியிருக்காராம். தமிழகத்தில் உளவுத்துறைக்கும் உள்துறைக்கும் பவர் யுத்தம் நடக்குதுப்பா.''’
""உண்மைதாங்க தலைவரே, நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஐ.டி. ரெய்டின் போது, அமைச்சராலும் அவர் அப்பாவாலும் அதிகாரிகள் தாக்கப்பட்டதாக, எ.ஃப்.ஐ.ஆரின் விசாரணைத் தகவலில் குறிப்பிட்டிருந்தார். இது தெரிஞ்சதும் அமைச்சர், முதல்வர் எடப்பாடியிடம் போய், இது ஓ.பி.எஸ்.சின் வேலைன்னு முறையிட, இதைத் தொடர்ந்து கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் முன்பாக அவர்களின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் இருந்து நீக்கப்பட்டிருக்கு. இதைத் தொடர்ந்துதான், தாமரைக்கண்ணனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்குத் தூக்கியடிச்சிருக்காங்க.''’
""நான் வேறொரு தகவலைச் சொல்றேன். பா.ம.க. எக்ஸ் எம்.எல்.ஏ.வும் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான ரவிராஜ், அதிருப்தியில் இருப்பது பற்றி நக்கீரன் முன்னதாகவே எழுதியிருந்துச்சி. அவரை இப்போது பா.ம.க.வில் இருந்து நீக்கிட்டாங்க. கட்சியில் செல்வாக்கு மிகுந்தவரான ரவிராஜ், வடமாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரோடும் பேசிவருவதோடு, தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டியும் விவாதிச்சிருக்கார். இது பா.ம.க.வுக்குள் குழப்பத்தை உண்டாக்கியிருக்குன்னு கட்சி சீனியர்களே சொல்றாங்க''’ நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக