தமிழ்நாட்டை பாரதிய ஜனதா கட்சிதான் மறைமுகமாக ஆட்சி செய்கிறது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
மே 23-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் மாநிலங்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “அதிமுக கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது. இங்கு நடந்து கொண்டிருக்கும் அதிமுகவின் ஆட்சி, பாஜகவின் ஆட்சியாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்து தமிழகத்தில் பாஜக தன் ஆட்சியை எந்த தடையும் இல்லாமல் நடத்தி கொண்டிருக்கிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழகத்தில் நிரந்தரமாக திணிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது” என அவர் கூறியுள்ளார். மின்னம்பலம் செவ்வாய், 23 மே, 2017
கனிமொழி :தமிழகத்தை பாஜகதான் மறைமுகமாக ஆள்கிறது
தமிழ்நாட்டை பாரதிய ஜனதா கட்சிதான் மறைமுகமாக ஆட்சி செய்கிறது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
மே 23-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் மாநிலங்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “அதிமுக கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது. இங்கு நடந்து கொண்டிருக்கும் அதிமுகவின் ஆட்சி, பாஜகவின் ஆட்சியாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்து தமிழகத்தில் பாஜக தன் ஆட்சியை எந்த தடையும் இல்லாமல் நடத்தி கொண்டிருக்கிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழகத்தில் நிரந்தரமாக திணிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது” என அவர் கூறியுள்ளார். மின்னம்பலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக