சனி, 27 மே, 2017

மாட்டிறைச்சித் தடையின் பின்னணி.. இறைச்சி ஏற்றுமதி ! பண நீக்கத்தைப் போல மாடு நீக்கம்!..

sanna" :உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. •மோடி பதவியேற்ற மூன்றாண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது இந்தியா. அநேகமாக விரைவில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளிவிடடு முதலிடத்தைப் பிடிக்கும் என அமெரிக்க விவசாயத்துறை கணித்துள்ளது. •மோடியின் இந்தப் பதவிக்காலத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மாதம் 18 லட்சம் கிலோவா கவும், ஆண்டிற்கு 21,600,000 கிலோவாகவும் அதிகரித்து.. உலகச் சந்தையில் 48 சதவிகிதத்தை கைப்பற்றியுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பிரேசில் 19 சதவிகிதமே இன்னும் கடைபிடிக்கிறது. •இந்தியாவின் ஒட்டுமொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியை All India Meat & Livestock Exporters Association (AIMLEA) கையாள்கிறது. இதன் மூலம் 45 நிறுவனங்கள் மாட்டிறைச்சியை உலகத் தரத்திற்கு மாடுகளை அறுத்து உற்பத்தி செய்கின்றன. இவைகளிடமிருந்து கொள்முதல் செய்வனவற்றில் ஆறு நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. அதில் 3 நிறுவனங்கள் பாஜக ஆதரவாளர்களைச் சேர்ந்தது. அவை..

1) Arabian Exports Pvt.Ltd.
Owner’s name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001


2) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner’s name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001

3) P.M.L Industries Pvt. Ltd.
Owner’s name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022

• மாநிலங்களில் மாட்டிறைச்சி உள்ளிட்ட பிற இறைச்சிகளின் ஏற்றுமதியில் உபி முன்னணியில் உள்ளது. அம்மாநிலத்தில்
Hind Agro Industries,
Al Noor Exports,
Al Nafees Frozen Food Exports,
Frigerico Conserva Allana,
Rustam Foods,
Rayban Foods Private ஆகியன மிகப் பெரியவை. இந்த நிறுவனங்களின் பெயர்கள் அரபு பெயர்களானாலும் பெரும்பாலும் இந்துக்களுக்கு சொந்தமானவை.

எனவே இறைச்சித் தடை என்பது ஏற்றுமதிக்கு இல்லை என்பது இதுவரை உள்ள உண்மை. இந்த உண்மைக்குப் பின் எந்த சக்திகள் உள்ளன என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

சொந்த நாட்டு மக்களை பட்டினிப் போட்டு அந்நிய நாட்டின் வயிறு வளர்க்கும் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது மோடி அரசு..

மக்களின் உணவில் கை வைத்த எந்த அரசும் நிலைத்ததில்லை...

-சன்னா

கருத்துகள் இல்லை: