சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக